For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
இந்தியன் சூப்பர் லீக் கணிப்புகள்
VS

"ஃபினிஷிங் டச்னா இப்படி இருக்கனும்" கடைசி நிமிட பரபரப்பில் மாஸ் காட்டிய நெதர்லாந்து.. பாவம் செனகல்!

தோஹா: செனகல் அணிக்கு எதிராக உலகக்கோப்பை கால்பந்து லீக் போட்டியில் நெதர்லாந்து அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றுள்ளது.

ஃபிபா உலகக்கோப்பை கால்பந்து தொடரின் இன்றைய நாளின் இரண்டாவது ஆட்டத்தில் குரூப் ஏ பிரிவில் உள்ள செனகல் - நெதர்லாந்து அணிகள் மோதின. இரு அணிகளும் இதற்கு முன் சர்வதேச போட்டியில் விளையாததால், யார் வெற்றிபெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

நெதர்லாந்து அணி தொடக்கம் முதலே அட்டாக்கிங் மனநிலையில் ஆடியது. இதனால் ஆட்டத்தின் 3வது நிமிடத்தில் நெதர்லாந்து அணிக்கு கோல் அடுக்க கிடைத்த வாய்ப்பை நழுவவிட்டது. அதேபோல் செனகல் அணி டிஃபென்சி மனநிலையில் தொடங்கியது. இதனால் நெதர்லாந்து வீரர்கள் கோல் அடிக்க முடியாமல் திணறினர்.

கோல் இல்லாத முதல் பாதி

கோல் இல்லாத முதல் பாதி

இதனைத் தொடர்ந்து இரு அணிகளும் கோல் அடிக்க முடியாமல் திணறிய நிலையில், 41வது நிமிடத்தில் செனகல் அணிக்கு கோல் அடிக்க முயற்சியை, நெதர்லாந்து அணியின் முக்கிய வீரரான வின்சென்ட் ஜான்சன் தடுத்து நிறுத்தினார். இதனால் முதல் பாதி ஆட்டம் கோல் எதுவும் அடிக்கப்படாமலேயே முடிவுக்கு வந்தது.

பறிபோன கோல் வாய்ப்பு

பறிபோன கோல் வாய்ப்பு

பின்னர் இரண்டாம் பாதி தொடக்கம் முதலே யார் முதல் கோலை அடிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இதற்கு ஏற்ப 53வது நிமிடத்தில் நெதர்லாந்து அணிக்கு கார்னர் வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பை நெதர்லாந்து அணியின் வான் டிஜிக் சரியான நேரத்தில் ஹெட்டர் அடிக்காததால் கோல் வாய்ப்பு பறிபோனது.

அசந்த நேரத்தில் கோல்

அசந்த நேரத்தில் கோல்

இதன்பின்னர் இரு அணி வீரர்கள் தொடர்ந்து கோல் அடிக்க எடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லை. இதனால் ஆட்டத்தின் ஒவ்வொரு நிமிடமும் பரபரப்பாக சென்றது. இந்த நிலையில் 84வது நிமிடத்தில் செனகல் கோல் கீப்பர் சற்று அசந்த நேரத்தில், திடீரென ஹெட்டர் மூலம் நெதர்லாந்து அணி கேக்போல் கோல் அடித்து அசத்தினார். இதன் மூலம் நெதர்லாந்து அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலைப் பெற்றது.

கடைசி நிமிட கோல்

கடைசி நிமிட கோல்

90 நிமிடங்கள் முடிவடைந்த நிலையில், 8 நிமிடங்கள் கூடுதலாக நேரம் வழங்கப்பட்டது. அதில் செனகல் அணியின் வீரர்கள் கோல் அடிக்க ஆக்ரோஷமான முயற்சிகளை மேற்கொண்டனர். ஆனால் செனகல் அணியின் முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை. ஆனால் கடைசி நிமிடத்தில் நெதர்லாந்து அணியின் டேவி கிளாஸன் அந்த அணிக்காக 2வது கோல் அடித்து அசத்தினார். இதன் மூலம் நெதர்லாந்து அணி 2-0 என்ற கோல் கணக்கில் செனகல் அணியை வீழ்த்தியது.

Story first published: Monday, November 21, 2022, 23:58 [IST]
Other articles published on Nov 21, 2022
English summary
Netherlands won the World Cup Football League match against Senegal 2-0. Netherland players Kakpo and Klaassen scored a fantastic Goal.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+