Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

'ஃபீஃபா'- 4 நாட்களில் 2வது தோல்வி: பிரேசிலுக்கு மூன்றாவது இடமும் கிடைக்காமல் போச்சே

பிரேசிலியா: ஃபீஃபா கால்பந்து உலகக் கோப்பை போட்டியில் 3வது இடத்திற்கான போட்டியில் பிரேசிலை 3-0 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்து வீழ்த்தியுள்ளது.

ஃபீஃபா கால்பந்து உலகக் கோப்பை போட்டிகள் பிரேசிலில் நடைபெற்று வருகிறது. இன்று அர்ஜென்டினா மற்றும் ஜெர்மனி அணிகள் மோதும் இறுதிப் போட்டி மரகானா ஸ்டேடியத்தில் நடைபெறகிறது.

முன்னதாக 3வது இடத்துக்கான போட்டி நடைபெற்றது.

பிரேசில்

பிரேசில்

அரையிறுதிப் போட்டியில் ஜெர்மனியிடம் 7-1 என்ற கோல் கணக்கில் படுதோல்வி அடைந்த பிரேசில் மூன்றாவது இடத்தை பிடிக்க நெதர்லாந்துடன் மோதியது.

இதிலாவது?

இதிலாவது?

அரையிறுதிப் போட்டியில் பிரேசில் படுதோல்வி அடைந்ததையடுத்து அந்நாட்டு ரசிகர்கள் கண்ணீர் சிந்தினர். இதையடுத்து பிரேசில் 3வது இடத்தையாவது பிடிக்குமா என்று அவர்கள் எதிர்பார்த்தனர்.

அடுத்தடுத்து தோல்வி

அடுத்தடுத்து தோல்வி

3வது இடத்துக்கான போட்டியில் பிரேசில், நெதர்லாந்திடம் 3-0 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்தது. பிரேசில் அடுத்தடுத்து தோல்வி அடைந்துள்ளது ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

நெதர்லாந்து

நெதர்லாந்து

நெதர்லாந்து அணி சார்பில் அதன் கேப்டன் ராபின் வான் பெர்சி, டாலீ பிளைன்ட் மற்றும் ஜார்ஜினியோ ஆகியோர் தலா ஒரு கோல் அடித்து தங்கள் அணி 3வது இடத்தை பிடிக்க உதவி செய்தனர்.

பெர்சி

பெர்சி

இந்த உலகக் கோப்பையில் 6 போட்டிகளில் விளையாடிய ராபின் வான் பெர்சி மொத்தம் 4 கோல்கள் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நெய்மார்

நெய்மார்

பிரேசிலின் நட்சத்திர ஆட்டக்காரரான நெய்மார் காயம் காரணமாக போட்டிகளில் இருந்து வெளியேறியதுடன் அந்த அணியின் பலம் குறைந்துவிட்டது.

Story first published: Sunday, July 13, 2014, 11:03 [IST]
Other articles published on Jul 13, 2014
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+