Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

'கப்' வாங்கினா.. விண்வெளிக்கு இலவச பயணம்: நெதர்லாந்துக்கு டச்சு நிறுவனம் பரிசு!

ரியோடி ஜெனீரோ: நெதர்லாந்து அணி உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டியில் கோப்பையை தட்டி வந்தால் அனைத்து வீரர்களையும், இலவசமாக விண்வெளிப் பயணத்திற்கு அழைத்துச் செல்வதாக நெதர்லாந்தைச் சேர்ந்த ஏரோஸ்பேஸ் பொறியியல் நிறுவனம் ஒன்று பரிசு அறிவித்துள்ளது.

3 முறை இறுதிப் போட்டி வரை வந்து 2வது இடத்தைப் பிடித்த அணி நெதர்லாந்து. கோப்பைக் கனவு இதுவரை அதற்குக் கை கூடவில்லை.

இந்த தொடரில் இதுவரை ஒரு போட்டியிலும் தோல்வியைச் சந்திக்கமல் கம்பீரமாக காலிறுதிக்குள் வந்துள்ளது.

காலிறுதியில் கோஸ்டாரிகா

காலிறுதியில் கோஸ்டாரிகா

காலிறுதிப் போட்டியில் கோஸ்டாரிகாவைச் சந்திக்கவுள்ளது நெதர்லாந்து. இப்போட்டியில் வென்று அரை இறுதிக்குள் அது நிச்சயம் நுழையும் என்று நெதர்லாந்து ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.

வென்றால் விண்வெளிக்கு

வென்றால் விண்வெளிக்கு

இந்த நிலையில் நெதர்லாந்தைச் சேர்ந்த ருயிம்டெவார்ட்பெட்ரிஜ் என்ற ஏரோஸ்பேஸ் பொறியியல் நிறுவனம் ஒரு பரிசை அறிவித்துள்ளது. அதாவது நெதர்லாந்து அணி கோப்பையை வென்று சாம்பியன் ஆனால் விண்வெளிப் பயணத்தை அது பரிசாக அறிவித்துள்ளது.

23 பேருக்கும் இலவச பயணம்

23 பேருக்கும் இலவச பயணம்

நெதர்லாந்து அணியில் இடம் பெற்றுள்ள 23 பேரையும் இலவசமாக விண்வெளிக்குக் கூட்டிச் செல்வதாக அது கூறியுள்ளது.

அபாரமான அணிக்கு அபாரமான பரிசு

அபாரமான அணிக்கு அபாரமான பரிசு

இதுகுறித்து நிறுவனத்தின் இணை நிறுவனர் மிச்சில் மோல் கூறுகையில் நெதர்லாந்து அணி அபாரமான அணி. எனவே அதற்கு அபாரமான பரிசாக இந்த விண்வெளிப் பயணத்தை அறிவிக்கிறோம் என்றார்.

பூமியிலிருந்து 103 கிலோமீட்டர் உயரத்திற்கு

பூமியிலிருந்து 103 கிலோமீட்டர் உயரத்திற்கு

பூமியிலிருந்து 103 கிலோமீட்டர் உயரத்திற்கு விண்வெளியில் நெதர்லாந்து அணியினர் அழைத்துச் செல்லப்படுவார்களாம்.

பார்க்கலாம்.. நெதர்லாந்து அணி இந்தப் பரிசையும் தட்டிச் செல்கிறதா என்று.

Story first published: Wednesday, July 2, 2014, 11:48 [IST]
Other articles published on Jul 2, 2014
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+