Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

"ஆதிக்கம்னா என்ன தெரியுமா" அதிர்ச்சியில் அமெரிக்கா .. காலிறுதியில் கால்பதித்த நெதர்லாந்து!

தோஹா: அமெரிக்கா அணிக்கு எதிரான ரவுண்ட் ஆஃப் 16 போட்டியில் 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றதன் மூலம் நெதர்லாந்து அணி உலகக்கோப்பைத் தொடரின் காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடரில் குரூப் சுற்று போட்டிகள் முடிவடைந்து இன்று முதல் நாக் அவுட் சுற்று போட்டிகள் தொடங்கியுள்ளது. இன்றைய நாளின் முதல் போட்டியில் மூன்று முறை உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கு முன்னேறிய பலம் வாய்ந்த நெதர்லாந்து அணி எதிர்த்து அமெரிக்கா விளையாடியது.

அமெரிக்கா அணியின் தடுப்பாட்டத்திற்கும், நெதர்லாந்து அணியின் அட்டாக்கிங் ஆட்டத்திற்கும் சரியான போட்டியாக இருக்கும் என்பதால், ரசிகர்களிடையே இந்தப் போட்டிக்கு அதிக எதிர்பார்ப்பு இருந்தது.

ஆரம்பமே அதிர்ச்சி

ஆரம்பமே அதிர்ச்சி

இந்த நிலையில் ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்கள் அமெரிக்கா அணி வீரர்கள் அட்டாக் செய்ய தொடங்கினர். ஆனால் டம்பிரிஸ் கொடுத்த கிராஸை சிறப்பாக கணித்து ஆட்டத்தின் 10வது நிமிடத்தில் நெதர்லாந்து அணியின் டெபாய் முதல் கோலை அடித்து அசத்தினார். இதன் மூலம் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்று நெதர்லாந்து அணி ஆரம்பத்திலேயே அமெரிக்காவுக்கு அதிர்ச்சி கொடுத்தது.

 நெதர்லாந்து ஆதிக்கம்

நெதர்லாந்து ஆதிக்கம்

இதனைத் தொடர்ந்து நெதர்லாந்து வீரர்களின் ஆதிக்கம் அதிகரித்தது. கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்புகளிலும் நெதர்லாந்து வீரர்கள் அட்டாக் மேல் அட்டாக் செய்ய தொடங்கினர். இருப்பினும் அமெரிக்கா கோல் கீப்பரின் சாதுர்யத்தால் தடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து முதல் பாதி ஆட்டம் கூடுதல் நேரத்தில், நெதர்லாந்து வீரர் பிளிண்ட் இரண்டாவது கோல் அடித்தார்.

அமெரிக்கா கோல்

அமெரிக்கா கோல்

இதனால் நெதர்லாந்து அணி 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலைப் பெற்றது. தொடர்ந்து இரண்டாம் பாதியில் அமெரிக்கா அணி கோல் அடிக்க வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கியது. அதற்கேற்ப அட்டாக் செய்தபோது, அடுத்தடுத்து கோல் அடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அதனை அமெரிக்கா வீரர்கள் தவறவிட்டனர். இறுதியாக 76வது நிமிடத்தில் பொலிசிக் கொடுத்த பாஸில், அமெரிக்க அணியின் ரைட் கோல் அடித்தார்.

நெதர்லாந்து பதிலடி

நெதர்லாந்து பதிலடி

இதனால் ஆட்டத்தில் 2-1 என்ற கோல் கணக்கில் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் இந்த பரபரப்பை அடுத்த 5 நிமிடத்திலேயே நெதர்லாந்து தணித்தது. 81வது நிமிடத்தில் நெதர்லாந்து அணியின் டம்பிரிஸ் அந்த அணிக்காக மூன்றாவது கோலை அடித்து அசத்தினார். தொடர்ந்து இரண்டாம் பாதியில் கூடுதல் நேரம் வழங்கியும் அமெரிக்கா அணி எந்த கோலும் அடிக்கவில்லை.

காலிறுதிக்கு முன்னேற்றம்

காலிறுதிக்கு முன்னேற்றம்

இதன்மூலம் நெதர்லாந்து அணி 3-1 என்ற கோல் கணக்கில் அமெரிக்காவை வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் நெதர்லாந்து அணி உலகக்கோப்பைத் தொடரின் காலிறுதி சுற்றுக்கு முன்னேறி உள்ளது.

Story first published: Saturday, December 3, 2022, 22:59 [IST]
Other articles published on Dec 3, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+