மாஸ்கோ: உலகக் கோப்பை போட்டியில் மூன்றாவது இடத்தை பறிகொடுத்த இங்கிலாந்து அணிக்கு, மற்றொரு சோகமான சம்பவமும் நடந்துள்ளது. இந்த தோல்வியால், ஒரே தொடரில் ஒரே அணியிடம் 2 முறை தோற்ற முதல் அணி என்ற பெயர் இங்கிலாந்துக்கு கிடைத்துள்ளது.
உலகக் கோப்பை கால்பந்து தொடர் நிறைவு கட்டத்தை எட்டி விட்டது. நாளை இறுதிப் போட்டி நடைபெறவுள்ளது. முன்னதாக இன்று மூன்றாவது இடத்துக்கான போட்டியில் பெல்ஜியமும், இங்கிலாந்தும் மோதின.

இந்த தொடரில் இரு அணிகளும் 2வது முறையாக மோதுகின்றன. இரு அணிகளும் ஜி பிரிவில் இடம் பெற்றிருந்தன
லீக் சுற்றுப் போட்டியில் இரு அணிகளும் மோதிய போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் பெல்ஜியம் வெற்றி பெற்றது. இந்த நிலையில் தற்போது இரு அணிகளும் 3வது இடத்துக்கான போட்டியில் மீண்டும் நேருக்கு நேர் மோதின.
இதில் தோல்வியடைந்ததால், ஒரே தொடரில் ஒரே அணியிடம் 2 முறை தோல்வியுற்ற முதல் அணி என்ற புதிய வரலாறை இங்கிலாந்து படைத்துள்ளது.