Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அடுத்த உலகக் கோப்பை கத்தாரில் நடக்கிறது.... எப்போது நடக்கிறது தெரியுமா!

மாஸ்கோ: 21-வது ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் நிறைவை எட்டியுள்ளன. அடுத்த உலகக் கோப்பை கத்தாரில் 2022 நவம்பர் 21 முதல் டிசம்பர் 18ம் தேதி வரை நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

21-வது ஃபிபா உலகக் கோப்பை ரஷ்யாவில் கடந்த மாதம் 14ம் தேதி துவங்கியது. இன்று இரவு நடக்கும் பைனலில் பிரான்ஸ் மற்றும் குரேஷியா மோத உள்ளன.

next world cup to be held in november 2022

ரஷ்யாவில் நடக்கும் இந்த உலகக் கோப்பை போட்டிகள் மிகச் சிறப்பான முறையில் நடந்துள்ளதாக ஃபிபாவின் தலைவர் கியானி இன்பான்டினோ கூறியுள்ளார்.

இதனிடையில், அடுத்த 2022ல் கத்தாரில் நடக்கும் அடுத்த உலகக் கோப்பை போட்டிகள் நவம்பர் 21 முதல் டிசம்பர் 18 வரை நடக்கும் என்று அவர் கூறியுள்ளார்.

வழக்கமாக ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில்தான் உலகக் கோப்பை நடக்கும். அடுத்த உலகக் கோப்பை நவம்பர் மற்றும் டிசம்பரில் நடக்க உள்ளது.

தற்போது உலகக் கோப்பையில் 32 அணிகள் பங்கேற்கின்றன. 2026ல் அமெரிக்காவில் நடக்கும் உலகக் கோப்பையில் 48 அணிகள் பங்கேற்கும் என்று ஏற்கனவே முடிவு செய்யப்பட்டுள்ளது. 2022 உலகக் கோப்பையிலேயே 48 அணிகள் பங்கேற்பது குறித்து ஆராயப்படுகிறது.

இது குறித்து ஃபிபா உறுப்பினர்கள் மற்றும் கத்தார் அரசுடன் பேசி முடிவெடுக்கப்படும் என்று இன்பான்டினோ கூறியுள்ளார்.

Story first published: Sunday, July 15, 2018, 16:53 [IST]
Other articles published on Jul 15, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+