நட்சத்திர வீரர் நெய்மாருக்கு முதுகில் அடி.. ஜெர்மனிக்கு எதிராக விளையாட மாட்டார்
ரியோ டி ஜெனீரோ: உலக கோப்பை கால்பந்து போட்டியில் பிரேசில் அணியின் நட்சத்திர வீரர் நெய்மார் கொலம்பியா அணிக்கு எதிரான ஆட்டத்தின் இறுதி நேரத்தில் முதுகெலும்பில் ஏற்பட்ட காயம் காரணமாக காரணமாக போட்டியிலிருந்து விலக நேர்ந்துள்ளது.
அவர் உடல் நலம் தேற இன்னும் சில வாரங்கள் ஆகும் என்பதால் ஜெர்மனிக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் பங்கேற்க முடியாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரேசில் அணியின் முக்கிய வீரரான நெய்மார் இந்த போட்டித்தொடரில் 4 கோல் அடித்துள்ளார். நெய்மார் காயம் காரணமாக விலகியுள்ளது பிரேசில் அணிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.

அதே போல பிரேசில் அணியின் கேப்டன் டி சில்வா 2 மஞ்சள் கார்டுகள் வாங்கியுள்ளார். இதனால் அவரும் அரையிறுதிப் போட்டியில் விளையாட இயலாது.
இந்தக் காரணங்களால் உலகக் கோப்பையை நடத்தும் பிரேசில் அணியின் வெற்றி கேள்விக்குறியாகியுள்ளது.


Click it and Unblock the Notifications