Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சேம் சைடு கோலுக்கு நடுவே, நெய்மார் அதிரடியுடன் வெற்றிக்கணக்கை துவக்கிய பிரேசில்!

சாவ் பவுலோ: பிரேசில் தனக்கே உரித்தான ஸ்டைலில் குரோஷியா அணியை வீழ்த்தி முதல் போட்டியிலேயே முத்திரை பதித்துள்ளது.

உலக கோப்பை கால்பந்து போட்டித்தொடர் இந்திய நேரப்படி நேற்றிரவு 1.30 மணிக்கு பிரேசிலில் துவங்கியது.

பலப்பரிட்சை....

பலப்பரிட்சை....

முன்னதாக கண் கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. முதல் போட்டியில் பிரேசிலும், ஐரோப்பிய நாடான குரோஷியாவும் பலப்பரிட்சை நடத்தின. சாவ்பவுலோ நகரில் இப்போட்டி நடந்தது.

சேம் சைட் கோல்...

சேம் சைட் கோல்...

போட்டி தொடங்கிய 11 நிமிடத்தில், குரோஷியாவின் நிக்கிக்கா ஜெலாவிக் கோல் அடிக்க முயன்றார். அதைத் தடுக்க முயற்சித்தார் பிரேசிலின் மார்செலோ. ஆனால் மார்செலோவின் காலில் பட்டு கோலானதால் அவரே சேம் சைட் கோல் அடித்து குரோஷியாவுக்கு லீட் எடுத்துக் கொண்டார்.ஸ்தம்பித்த ரசிகர்கள்... கொந்தளித்தனர்

உலக கோப்பையில் சேம் சைட் கோல் அடிப்பது பிரேசிலுக்கு இதுதான் முதல் தடவை என்று விளையாட்டு பார்வையாளர்கள் கூறுகிறார்கள். இந்த சேம்சைடு கோலால், மைதானத்தில் குழுமியிருந்த பிரேசில் அதிபர் டில்மா ரவுசெப் உட்பபட 62 ஆயிரத்து 103 ரசிகர்களும் ஒரு நிமிடம் அப்படியே அமைதியில் ஸ்தம்பித்தனர். சாம்பியன் பட்டம் வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட அணியே தனது நாட்டுக்கு எதிராக சேம்சைடு கோல் போட்டதால் ரசிகர்கள் கொந்தளித்தனர்.

வீறு கொண்டு எழுந்த நம்பிக்கை நட்சத்திரம் நெய்மார்...

வீறு கொண்டு எழுந்த நம்பிக்கை நட்சத்திரம் நெய்மார்...

அப்போதுதான் வீறு கொண்டு எழுந்தார் பிரேசிலின் நம்பிக்கை நட்சத்திரம், நெய்மார். 29 மற்றும், 71வது நிமிடங்களில் நெய்மார் அடுத்தடுத்து அடித்த கோல்கள், குரோஷியாவை முந்திச்செல்ல உதவின. 91வது நிமிடத்தில் பிரேசில் வீரர் ஆஸ்கர் மற்றொரு கோலை அடிக்க 3க்கு1 என்ற கோல் கணக்கில் பிரேசில் எளிதாக வென்றது. உள்ளூர் ரசிகர்கள் உற்சாக கூத்தாடினார்கள்.

22 வயது இளம் வீரர்...

22 வயது இளம் வீரர்...

ஆட்ட நாயகன் விருதை சந்தேகமின்றி நெய்மாருக்கு வழங்கினர். இதுகுறித்து நெய்மார் கூறுகையில், "நான் எத்தனை கோல்கள் அடித்தேன் என்பதைவிட அணி வெற்றிபெற்றது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. நான் எதிர்பார்த்ததைவிட சிறப்பாக பிரேசில் தனது ஆட்டத்தை துவக்கிவிட்டது. முதல் கோலை நான் சரியாக உதைக்கவில்லை. எப்படியோ கோல் கம்பத்துக்குள் சென்றுவிட்டது மகிழ்ச்சியளிக்கிறது" என்றார் 22 வயது இளம் வீரர் நெய்மார்.

Story first published: Friday, June 13, 2014, 9:37 [IST]
Other articles published on Jun 13, 2014
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+