Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கால்பந்தாட்ட போட்டிகளுக்கு பிளாக் டிக்கெட் விற்கும் நெய்மர் தந்தை!

பிரேசிலா: உலக கோப்பை கால்பந்தாட்ட பிளாக் டிக்கெட் சந்தையில் பிரேசில் நட்சத்திர ஆட்டக்காரர் நெய்மரின் தந்தைக்கு தொடர்புள்ளதாக அந்த நாட்டு பத்திரிகையொன்று வெளியிட்ட செய்தி பரபரப்பை கிளப்பியுள்ளது. கால்பந்து போட்டித்தொடரில் இருந்து காயம் காரணமாக நெய்மர் விலகியுள்ள நிலையில், பிரேசில் ரசிகர்களுக்கு இது மேலும் ஒரு அதிர்ச்சி செய்தியாக அமைந்துள்ளது.

ரசிகர்கள் குவிகின்றனர்

ரசிகர்கள் குவிகின்றனர்

உலக கோப்பை கால்பந்தாட்ட போட்டித்தொடர் பிரேசிலில் நடந்து வருகிறது. இந்த போட்டித்தொடரை நேரில் கண்டு ரசிக்கவும், வீரர்களை உற்சாகப்படுத்தவும், உலகமெங்கிலும் இருந்து ரசிகர்கள் பிரேசிலுக்கு படையெடுத்துள்ளனர்.

கள்ள டிக்கெட்

கள்ள டிக்கெட்

பல மாதங்கள் முன்பே போட்டித்தொடருக்கான டிக்கெட்டுகள் விற்று தீர்ந்துவிட்ட நிலையில், கள்ளச்சந்தையில், அதிக விலைக்கு டிக்கெட் விற்பனை நடப்பதாக கூறப்படுகிறது.

செல்வந்தரின் தந்தைக்கு தொடர்பா?

செல்வந்தரின் தந்தைக்கு தொடர்பா?

இதில் அதிர்ச்சி என்னவென்றால், இந்த பிளாக் டிக்கெட் மார்க்கெட்டில் பிரேசிலின் நட்சத்திர ஆட்டக்காரர்களில் ஒருவரும், உலக கால்பந்தாட்ட வீரர்களில் செல்வச்செழிப்போடு உள்ளவருமான நெய்மரின் தந்தைக்கு தொடர்புள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

மீடியாவில் கசிந்த தகவல்

மீடியாவில் கசிந்த தகவல்

பிரேசிலில் வெளியாகும் முன்னணி நாளிதழ் ஒன்றில் இதுகுறித்த செய்தி வெளியாகியுள்ளது. அல்ஜீரிய நாட்டின் தொழிலதிபர் மமாது லாமைன் என்பவர் பிளாக் டிக்கெட் மார்க்கெட்டில் 3 லட்சம் யூரோ அளவுக்கு பணத்தை புழக்கத்தில் விட்டுள்ளதாகவும், நெய்மர் சீனியருக்கு இதில் தொடர்புள்ளதாகவும் அந்த செய்தித்தாள் குற்றம்சாட்டியுள்ளது.

நெய்மர் தந்தை மறுப்பு

நெய்மர் தந்தை மறுப்பு

இதுகுறித்து நெய்மர் சீனியர் சார்பில் மறுப்பு வெளியிடப்பட்டுள்ளது. அந்த மறுப்பில், பிளாக் மார்க்கெட்டில் நானோ என்னுடைய நிறுவனமோ ஈடுபடவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Story first published: Monday, July 7, 2014, 13:35 [IST]
Other articles published on Jul 7, 2014
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+