Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

36 போட்டிகளிலேயே 100 கோல் அடித்து சாதனை படைத்த “பிரேசில்”…!

ரியோ டிஜெனீரோ: பிரேசில் உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டியில் மேலும் ஒரு சாதனை படைக்கப்பட்டுள்ளது.

இப்போட்டித் தொடரின் 100வது கோல் 36வது போட்டியிலேயே அடிக்கப்பட்டுள்ளது. கடந்த தென் ஆப்பிரிக்கப் போட்டித் தொடரின்போது 47வது போட்டியில்தான் 100வது கோல் அடிக்கப்பட்டது.

ஆனால் தற்போதைய தொடரில் வீரர்கள் அனைவரும் படு சூடாக ஆடி வருவதால் சீக்கிரமே 100வது கோலைத் தொட்டு விட்டது நடப்பு உலகக் கோப்பைத் தொடர்.

நெய்மார் போட்ட 100

நெய்மார் போட்ட 100

பிரேசில் சூப்பர் ஸ்டார் நெய்மார்தான் நடப்புத் தொடரின் 100வது கோலை அடித்த பெருமைக்குரியவராகியுள்ளார்.

கோல் மேல் கோல்..

கோல் மேல் கோல்..

நெய்மார் இதுவரை 3 போட்டிகளில் 4 கோல்கள் அடித்து அதிக கோல்கள் அடித்த வீரர்களில் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

2-0-2

2-0-2

குரோஷியாவுக்கு எதிரான போட்டியில் 2 கோல்கள் அடித்த நெய்மார், அடுத்து மெக்சிகோ போட்டியின்போது கோல் போடவில்லை. இதையடுத்த கேமரூனுக்கு எதிரான 3வது போட்டியின்போது 2 கோல்கள் அடித்தார்.

இதுவரை 108 கோல்கள்

இதுவரை 108 கோல்கள்

நடப்புத் தொடரில் இதுவரை மொத்தம் 108 கோல்கள் போடப்பட்டுள்ளன.

தென் ஆப்பிரிக்காவை விட வேகம்

தென் ஆப்பிரிக்காவை விட வேகம்

தென் ஆப்பிரிக்காவில் கடந்த முறை நடந்த போட்டித் தொடரின்போது 36 போட்டிகளில் 77 கோல்கள்தான் அடிக்கப்பட்டிருந்தன. பிரேசில் தொடர் அதை முறியடித்து விட்டது.

Story first published: Tuesday, June 24, 2014, 14:55 [IST]
Other articles published on Jun 24, 2014
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+