Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பிரேசில் அணியின் 'பிளேபாய்' நெய்மர்.. பின்னால் சுற்றும் இளம் பெண்கள்...

ரியோடி ஜெனிரோ: கால்பந்தாட்டத்தில் கலக்கிவரும் பிரேசிலின் நெய்மர், காதல் களத்திலும் ஒரு மன்னன்தான். 22 வயதுக்குள் அவரது வாழ்க்கையில் எத்தனை வசந்த காலங்கள்.. அடடா.. என நம்மூர் இளைஞர்களை ஏங்க வைக்கிறது அவரது காதல் அனுபவங்கள்.

அடுத்த மாரடோனா..

அடுத்த மாரடோனா..

பிரேசில் அணியின் மாரடோனாவுக்கு இணையாக வரக்கூடிய அனைத்து தகுதிகளும் உள்ளவர் என்று உலக கால்பந்தாட்ட விமர்சகர்கள் பாராட்டப்படுபவர் நெய்மர். பிரேசில் அணியின் முன்கள வீரராக செயல்பட்டுவருகிறார்.

அதகள ஹேர் கட்

அதகள ஹேர் கட்

முடியை அப்படி இப்படி வெட்டிவிட்டு அமர்க்களம் செய்தாலும், முகத்தில் என்னவோ குழந்தைதனம் ததும்பத்தான் செய்கிறது. ஆனால், இவர், 19வயதிலேயே ஒரு குழந்தைக்கு, தந்தையானவர் என்று சொன்னால் யார்தான் நம்புவார்கள். இருப்பினும் அது உண்மைதான்.

தந்தையானதும் அழுத நெய்மர்..

தந்தையானதும் அழுத நெய்மர்..

பிரேசில் மாடல் கரோலினா டான்டாசுடனான காதலுக்கு கிடைத்த பரிசுதான் அழகான ஆண் குழந்தை. எதிரணி வீரர்கள் பலரும் சூழ்ந்து நின்று பந்தை பறிக்க முற்பட்டாலும் பயப்படாமல் அதை நகர்த்தி செல்லும் நெய்மர், 19 வயதில் தந்தையான செய்தியை கேட்டு பயத்தில் அழுதுவிட்டாராம். இதை அவரே வெளிப்படையாக கூறியுள்ளார்.

இரண்டாவது பாதி ஆட்டம்..

இரண்டாவது பாதி ஆட்டம்..

குழந்தையை ஆசையாக தூக்கி வைத்து போட்டோவுக்கு போஸ் கொடுத்துக்கொண்டிருந்த நெய்மர் உடலில், மீண்டும் காதல் அணுக்கள் வேலை செய்ய ஆரம்பித்தன. இதன்விளைவு, பிரேசில் நடிகை புருனா மார்க்ஸ் இவரது வலையில் வீழ்ந்தார். சிறிது காலம் தொடர்ந்த இந்த உறவு கடந்த பிப்ரவரியில் ஒரு நல்ல நாளில் வெட்டிவிடப்பட்டது.

குழந்தையை ஆசையாக தூக்கி வைத்து போட்டோவுக்கு போஸ் கொடுத்துக்கொண்டிருந்த நெய்மர் உடலில், மீண்டும் காதல் அணுக்கள் வேலை செய்ய ஆரம்பித்தன. இதன்விளைவு, பிரேசில் நடிகை புருனா மார்க்ஸ் இவரது வலையில் வீழ்ந்தார். சிறிது காலம் தொடர்ந்த இந்த உறவு கடந்த பிப்ரவரியில் ஒரு நல்ல நாளில் வெட்டிவிடப்பட்டது.

சளைக்க மாட்டோமில்லை..

சளைக்க மாட்டோமில்லை..

சோர்ந்து போய்விடுவாரா நெய்மர்...? கால்பந்தாட்ட களத்தில் எத்தனை சவால்களை எதிர்கொண்டவர் அவர். பிரேசிலின் மற்றொரு மாடலிங் பெண்ணான, கேப்ரியல்லா லென்சிவுடன் உல்லாசமாக ஊர்சுற்ற ஆரம்பித்தார்.

மறுபடியும் இடையிலிருந்தா?

மறுபடியும் இடையிலிருந்தா?

இந்நிலையில் திடீர் திருப்பமாக, பழைய காதலி புருனா மார்கிசுடன் மீண்டும் நெருக்கம் காட்டுவதாக நெய்மர் குறித்த தகவல் பிரேசிலில் பரவி கிடக்கிறது. உலக கோப்பை கால்பந்தாட்டம் துவங்கிய பிறகு, இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன. இதனால் சக்களத்தி சண்டையில் புருனாவும், கேப்ரியல்லாவும் இறங்கிவிட்டார்களாம்.

பொருமும் இளசுகள்..

பொருமும் இளசுகள்..

பெரும் பணமும், அழகும், இளமையும், கால்பந்தாட்ட திறமையும் கொண்ட நெய்மர், சும்மா வூடு கட்டி வாழுறாருப்பா... என கடுப்பில் புலம்புகின்றனர் பிரேசில் இளசுகள்..

Story first published: Tuesday, July 1, 2014, 10:33 [IST]
Other articles published on Jul 1, 2014
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+