For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஃபிபா உலகக் கோப்பை... அணிகள் அலசல் - கடும் சவால்களை முறியடிக்குமா நைஜீரியா!

ஃபிபா உலகக் கோப்பை போட்டிகள் ரஷ்யாவில் நடக்கின்றன. இதில் பங்கேற்கும் நைஜீரியா அணி குறித்த விரிவான அலசல்.

சென்னை: 21வது ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷ்யாவில் நடக்கின்றன. ஜூன் 14ல் துவங்கி, ஜூலை 15 வரை நடக்கும் இந்த உலகக் கோப்பையில் 32 நாடுகள் பங்கேற்கின்றன. கோப்பையை வெல்வதற்காக அனைத்து அணிகளும் தயாராகி வருகின்றன.

2014ல் நடந்த உலகக் கோப்பையில் பங்கேற்ற நடப்பு சாம்பியன் ஜெர்மனி உள்பட 20 நாடுகள் இந்த உலகக் கோப்பைக்கு தகுதி பெற்றுள்ளன. பல்வேறு நிலைகளில் நடத்தப்பட்ட தகுதிச் சுற்று ஆட்டங்களில் வென்று, 31 அணிகள் உலகக் கோப்பைக்கு நுழைந்துள்ளன. போட்டியை நடத்துவதால் ரஷ்யா நேரடியாக தகுதி பெற்றுள்ளது.

Nigeria in a toughest group in the fifa world cup

ஜெர்மனி அல்லது பிரேசில் இந்த உலகக் கோப்பையை வெல்லும் அணிகளாக கருதப்படுகின்றன. அதே நேரத்தில் அர்ஜென்டீனா, ஸ்பெயின், பெல்ஜியம் போன்ற அணிகளுக்கும் வாய்ப்பு உள்ளதாகக் கருதப்படுகிறது.

இந்த உலகக் கோப்பையில் பங்கேற்கும் அணிகளின் பலம், பலவீனம் குறித்து மைகேல் தமிழ் விரிவாக அலசுகிறது.
---
நாடு : நைஜீரியா

டி பிரிவில் அர்ஜென்டீனா, குரேஷியா, ஐஸ்லாந்து உடன் இடம் பெற்றுள்ளது.

லீக் சுற்று ஆட்டங்கள் :
ஜூன் 17ல் குரேஷியா
ஜூன் 22ல் ஐஸ்லாந்து
ஜூன் 26ல் அர்ஜென்டீனா

ஃபிபா தரவரிசை : 48

கடந்த உலகக் கோப்பையில் : காலிறுதிக்கு முந்தைய சுற்று.

உலகக் கோப்பையில் சிறந்த இடம் : 1994, 1998 மற்றும் 2014ல் காலிறுதிக்கு முந்தைய சுற்று

கோச் : ஜெர்னாட் ரோர்
---
இந்த உலகக் கோப்பைக்கு ஆப்பிரிக்காவில் இருந்து நுழைந்த முதல் அணி நைஜீரியா. 2006 உலகக் கோப்பையைத் தவிர 1994ல் இருந்து தொடர்ந்து தகுதி பெற்று வருகிறது. தற்போது ஆறாவது முறையாக உலகக் கோப்பையில் விளையாட உள்ளது.

கடந்த ஆண்டு அர்ஜென்டீனாவுக்கு எதிரான நட்பு ஆட்டத்தில் வென்றதில் இருந்து, இந்த உலகக் கோப்பையில் அரை இறுதிக்கு நைஜீரியா கண்டிப்பாக நுழையும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், அதன்பிறகு தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வருகிறது. இந்த உலகக் கோப்பைக்கான நான்கு பயிற்சி ஆட்டங்களில் மூன்றில் தோல்வி அடைந்தது, ஒன்றை டிரா செய்தது.

போதிய சர்வதேசப் போட்டிகளில் விளையாடிய அனுபவம் இல்லாத பல வீரர்கள் அணியில் இடம்பெற்றுள்ளனர். மிகவும் வலுவான அர்ஜென்டீனாவைத் தவிர குரேஷியா, ஐஸ்லாந்து ஆகிய அணிகள் உள்ளன. இவற்றை வெல்வது தற்போதுள்ள நைஜீரிய அணிக்கு சுபலமான விஷயமில்லை.

Story first published: Sunday, June 10, 2018, 17:55 [IST]
Other articles published on Jun 10, 2018
English summary
Nigeria to face lot of challenges in the fifa world cup.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+