Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உலகக் கோப்பையில் நைஜீரியாகாரங்க அசத்தறாங்கப்பா.... ஆஹா என்ன ஸ்டைலு!

சென்னை:ஃபிபா உலகக் கோப்பை போட்டிகள் நாளை துவங்குகின்றன. இதில் யார் கோப்பையை தட்டிச் செல்வார்கள் என்றால் நான்கு அல்லது ஐந்து அணிகளை சொல்லலாம். ஆனால், சூப்பர் ஸ்டைலான அணி எது என்றால், கண்ணை மூடிக் கொண்டு அனைவரும் நைஜீரியாவையே சொல்வார்கள்.

21வது ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷ்யாவில் நாளை துவங்குகிறது. மொத்தம் 32 நாடுகள் இதில் பங்கேற்கின்றன. போட்டியில் பங்கேற்கும் அணிகளின் பெயர்கள் இறுதியானதுமே, உலகத்தின் பார்வை ஈர்த்தது நைஜீரியா. அந்த அணியின் ஜெர்சி, அனைவரையும் அட போட வைத்தது. அது உலகெங்கும் புதிய ஃபேஷனானது. பளீர் பச்சை மற்றும் வெள்ளை நிறத்தில் புது வடிவத்தில் அது அமைந்திருந்தது. இந்த உலகக் கோப்பையின் மிகச் சிறந்த ஜெர்சியாக கூறப்படுகிறது.

Nigeria bags the best fashionable team in the fifa world cup

இந்த நிலையில், நைஜீரியா வீரர்கள் ரஷ்யாவுக்கு வந்து சேர்ந்தனர். பயணத்துக்காக அந்த அணியின் வீரர்கள் அணிருந்த ஆடை, பார்த்ததும் ஈர்க்கத் துவங்கியது. இந்த உலகக் கோப்பையில் மிகச் சிறந்த பயண உடையாக நைஜீரியாவின் உடையை, பிபிசியின் வர்ணனையாளர்கள் குழு தேர்வு செய்துள்ளது.

வெள்ளை பேண்ட் மற்றும் வெள்ளை நிற ஷெர்வானி போன்ற சட்டையில் பளீர் பச்சை நிறத்தில் கால்பந்துகள் டிசைகளை கொண்டதாக அது வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்கு வெள்ளை நிற ஷூவுடன், வெள்ளை நிறத்தில் பச்சை நிற பட்டை கொண்ட தொப்பி அணிந்து நைஜீரிய வீரர்கள் ரஷ்யாவில் காலடி வைத்தனர்.

Nigeria bags the best fashionable team in the fifa world cup

அந்த உடை தற்போது உலகெங்கும் பேசப்படுகிறது. நைஜீரியா அணியை மிகச் சிறந்த ஃபேஷன் அணி என்று அனைவரும் கூறத் தொடங்கியுள்ளனர்.

உலகக் கோப்பையில் டி பிரிவில் அர்ஜென்டீனா, குரேஷியா, ஐஸ்லாந்து உடன் நைஜீரியா இடம் பெற்றுள்ளது. இந்த உலகக் கோப்பைக்கு ஆப்பிரிக்காவில் இருந்து நுழைந்த முதல் அணி நைஜீரியா. 2006 உலகக் கோப்பையைத் தவிர 1994ல் இருந்து தொடர்ந்து தகுதி பெற்று வருகிறது. தற்போது ஆறாவது முறையாக உலகக் கோப்பையில் விளையாட உள்ளது. ஆனால் காலிறுதிக்கு முந்தைய சுற்றை தாண்டியதில்லை.

Story first published: Wednesday, June 13, 2018, 16:52 [IST]
Other articles published on Jun 13, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+