Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அர்ஜென்டினாவுக்கு ஷாக் கொடுத்தது ஐஸ்லாந்து... அதற்கு ஷாக் கொடுத்தது நைஜீரியா!

வோல்கோகிராட்: 21வது ஃபிபா உலகக் கோப்பையில் பிரிவு சுற்றில் அணிகளின் இரண்டாவது ஆட்டம் துவங்கியுள்ளது. இந்த உலகக் கோப்பையின் 25வது ஆட்டத்தில் டி பிரிவில் நைஜீரியா 2-0 என ஐஸ்லாந்தை வென்றது.

21வது ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷ்யாவில் நடக்கின்றன. பல்வேறு நிலைகளில் நடத்தப்பட்ட தகுதிச் சுற்று ஆட்டங்களில் வென்று, 31 அணிகள் உலகக் கோப்பைக்கு நுழைந்துள்ளன. போட்டியை நடத்துவதால் ரஷ்யா நேரடியாக தகுதி பெற்றுள்ளது. 2014ல் நடந்த உலகக் கோப்பையில் பங்கேற்ற நடப்பு சாம்பியன் ஜெர்மனி உள்பட 20 நாடுகள் இந்த உலகக் கோப்பையிலும் பங்கேற்கின்றன.

Nigeria wins against iceland in the fifa world cup

இந்த உலகக் கோப்பைக்கான போட்டிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. 32 அணிகளும் தலா 4 அணிகள் என 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும் தனது பிரிவில் உள்ள மற்ற மூன்று அணிகளுடன் விளையாடும்.

அதன்படி ஒவ்வொரு அணியும் இரண்டாவது ஆட்டத்தில் விளையாடி வருகின்றன. ஏ பிரிவில் இருந்து ரஷ்யா, உருகுவே, சி பிரிவில் இருந்து பிரான்ஸ், டி பிரிவில் இருந்து குரேஷியா ஆகிய அணிகள் அடுத்தச் சுற்றுக்கு முன்னேறியுள்ளன. இந்த நிலையில் டி பிரிவில் இன்று நடந்த ஆட்டத்தில் ஐஸ்லாந்தை 2-0 என நைஜீரியா வென்றது.
----
பிரிவு டி
நைஜீரியா - ஐஸ்லாந்து
2 - 0
----
டி பிரிவில் இதுவரை...
* அர்ஜென்டினா 1-1 என ஐஸ்லாந்துடன் டிரா செய்தது.
* குரேஷியா 2-0 என நைஜீரியாவை வென்றது.
* குரேஷியா 3-0 என அர்ஜென்டினாவை வென்றது.
* நைஜீரியா 2-0 என ஐஸ்லாந்தை வென்றது.

டி பிரிவின் புள்ளிப் பட்டியலில் குரேஷியா 6 புள்ளிகளுடன் அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. நைஜீரியா 3 புள்ளிகளுடன் உள்ளது. அர்ஜென்டினா, ஐஸ்லாந்து தலா ஒரு புள்ளியுடன் உள்ளன.
-----
டி பிரிவில் இடம்பெற்றுள்ள லியோனல் மெஸ்ஸியின் அர்ஜென்டினா முதல் ஆட்டத்தில் அறிமுக அணியான ஐஸ்லாந்துடன் மோதியது. இந்த ஆட்டத்தில் அர்ஜென்டினாவுக்கு ஐஸ்லாந்து கடும் சவால் விடுத்தது. கடைசியில் 1-1 என்ற கோல் கணக்கில் ஆட்டம் டிராவானது. மெஸ்ஸி ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை.

இந்தப் பிரிவில் நடந்த இரண்டாவது ஆட்டத்தில் குரேஷியா 2-0 என நைஜீரியாவை வென்றது. நேற்று இரவு நடந்த ஆட்டத்தில் குரேஷியா 3 - 0 என அர்ஜென்டினாவை வென்று இந்தப் பிரிவில் முதல் அணியாக அடுத்தச் சுற்றுக்கு முன்னேறியது.

இன்று நடந்த ஆட்டத்தில் ஐஸ்லாந்து, நைஜீரியா மோதின. முன்னாள் உலகக் கோப்பை சாம்பியனான அர்ஜென்டினாவுக்கு சவால் விடுத்த ஐஸ்லாந்து இந்த ஆட்டத்தில் தடுமாறியது.

இந்த உலகக் கோப்பையின் சிறந்த ஃபேஷன் அணியான நைஜீரியா, துவக்கம் முதலே அதிரடியாக விளையாடியது. 63 சதவீத நேரம் பந்து அந்த அணியிடம் இருந்தது.

ஆட்டத்தின் 49வது நிமிடத்தில் மூசா நைஜீரியாவின் முதல் கோலை அடித்தார். பின்னர் 75 நிமிடத்தில் மூசா மற்றொரு கோலை அடிக்க 2-0 என நைஜீரியா வென்றது.

இதன் மூலம் நைஜீரியா 3 புள்ளிகளைப் பெற்றுள்ளது. இந்தப் பிரிவில் அடுத்து நடைபெறும் ஆட்டங்களில் அர்ஜென்டினா, நைஜீரியா மற்றும் குரேஷியா, ஐஸ்லாந்து சந்திக்கின்றன.

இதன் மூலம் அடுத்தச் சுற்றுக்கு முன்னேறுவதற்கான ஒரு வாய்ப்பு அர்ஜென்டினாவுக்கு கிடைத்துள்ளது.

Story first published: Friday, June 22, 2018, 22:33 [IST]
Other articles published on Jun 22, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+