Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

முதலில் அர்ஜென்டினா.... அடுத்தது நைஜீரியாவா... ஷாக் ட்ரீட்மென்ட் தர அறிமுக அணி ஐஸ்லாந்து தயார்!

Nigerial to face iceland in the fifa world cup

வோல்கோகிராட்: 21வது ஃபிபா உலகக் கோப்பையில் பிரிவு சுற்றில் அணிகளின் இரண்டாவது ஆட்டம் துவங்கியுள்ளது. இந்த உலகக் கோப்பையின் 25வது ஆட்டத்தில் டி பிரிவில் நைஜீரியாவை சந்திக்கிறது ஐஸ்லாந்து.

21வது ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷ்யாவில் நடக்கின்றன. பல்வேறு நிலைகளில் நடத்தப்பட்ட தகுதிச் சுற்று ஆட்டங்களில் வென்று, 31 அணிகள் உலகக் கோப்பைக்கு நுழைந்துள்ளன. போட்டியை நடத்துவதால் ரஷ்யா நேரடியாக தகுதி பெற்றுள்ளது. 2014ல் நடந்த உலகக் கோப்பையில் பங்கேற்ற நடப்பு சாம்பியன் ஜெர்மனி உள்பட 20 நாடுகள் இந்த உலகக் கோப்பையிலும் பங்கேற்கின்றன.

இந்த உலகக் கோப்பைக்கான போட்டிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. 32 அணிகளும் தலா 4 அணிகள் என 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும் தனது பிரிவில் உள்ள மற்ற மூன்று அணிகளுடன் விளையாடும்.

அதன்படி ஒவ்வொரு அணியும் இரண்டாவது ஆட்டத்தில் விளையாடி வருகின்றன. ஏ பிரிவில் இருந்து ரஷ்யா, உருகுவே, சி பிரிவில் இருந்து பிரான்ஸ், டி பிரிவில் இருந்து குரேஷியா ஆகிய அணிகள் அடுத்தச் சுற்றுக்கு முன்னேறியுள்ளன. இந்த நிலையில் டி பிரிவில் இன்று நடக்கும் ஆட்டத்தில் ஐஸ்லாந்து, நைஜீரியா விளையாடுகின்றன.
----
பிரிவு டி
ஐஸ்லாந்து - நைஜீரியா
போட்டி நடக்கும் நேரம் - இந்திய நேரப்படி இரவு 8.30 மணி
----
டி பிரிவில் இதுவரை...
* அர்ஜென்டினா 1-1 என ஐஸ்லாந்துடன் டிரா செய்தது.
* குரேஷியா 2-0 என நைஜீரியாவை வென்றது.
* குரேஷியா 3-0 என அர்ஜென்டினாவை வென்றது.

டி பிரிவின் புள்ளிப் பட்டியலில் குரேஷியா 6 புள்ளிகளுடன் அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. அர்ஜென்டினா, ஐஸ்லாந்து தலா ஒரு புள்ளியுடன் உள்ளன. நைஜீரியா புள்ளி ஏதும் பெறவில்லை.
-----
இந்த உலகக் கோப்பையில் மிகவும் எதிர்பார்க்கப்படும் மும்மூர்த்திகளாக அர்ஜென்டினாவின் லியோனல் மெஸ்ஸி, போர்ச்சுகல்லின் கிறிஸ்டியானோ ரொனால்டோ, பிரேசிலின் நெய்மர் உள்ளனர். அதனால் இந்த அணிகள் விளையாடும் ஆட்டங்களுக்கு தனி ஈர்ப்பு உள்ளது.

டி பிரிவில் இடம்பெற்றுள்ள மெஸ்ஸியின் அர்ஜென்டினா முதல் ஆட்டத்தில் ஐஸ்லாந்துடன் மோதியது. இந்த ஆட்டத்தில் அர்ஜென்டினாவுக்கு ஐஸ்லாந்து கடும் சவால் விடுத்தது. கடைசியில் 1-1 என்ற கோல் கணக்கில் ஆட்டம் டிராவானது. மெஸ்ஸி ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை.

இந்தப் பிரிவில் நடந்த இரண்டாவது ஆட்டத்தில் குரேஷியா 2-0 என நைஜீரியாவை வென்றது. நேற்று இரவு நடந்த ஆட்டத்தில் குரேஷியா 3 - 0 என அர்ஜென்டினாவை வென்று இந்தப் பிரிவில் முதல் அணியாக அடுத்தச் சுற்றுக்கு முன்னேறியது.

ஐஸ்லாந்து அணி முதல் முறையாக உலகக் கோப்பைக்கு நுழைந்துள்ளது. 2016ல் யூரோ கால்பந்து போட்டியில் கால் இறுதிக்கு முன்னேறி அசத்தியது. இதற்கு முன்பு 2010ல் ஸ்லோவாகியா அணி மட்டுமே அறிமுக உலகக் கோப்பையில் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

முதல் ஆட்டத்தில் அர்ஜென்டினாவுக்கு ஷாக் ட்ரீட்மென்ட் கொடுத்த ஐஸ்லாந்து இன்று நடக்கும் ஆட்டத்தில் நைஜீரியாவை சந்திக்கிறது. இந்த ஆட்டத்தில் வென்றால், அடுத்தச் சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

இந்தப் பிரிவில் கடைசியாக நடக்கும் ஆட்டத்தில் நைஜீரியாவுக்கு எதிராக அதிக கோல்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டிய நிலையில் அர்ஜென்டினா உள்ளது.

ஐஸ்லாந்து அணிக்கு இரண்டு ஆட்டங்கள் உள்ளதால், இன்று வென்றால், அடுத்தச் சுற்றுக்கான வாய்ப்பை அதிகரித்து கொள்ளலாம்.

Story first published: Friday, June 22, 2018, 1:59 [IST]
Other articles published on Jun 22, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+