உலக கோப்பை கால்பந்தாட்டத்தில் சூதாட்டம் நடக்கவில்லை- ஃபிஃபா அறிவிப்பு
ரியோடி ஜெனிரோ: உலக கோப்பை கால்பந்தாட்டத்தில் சூதாட்டம் நடைபெற்றதற்கான ஆதாரம் இல்லை என்று சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனம் (ஃபிஃபா), அறிவித்துள்ளது.
உலக கோப்பை லீக் சுற்றில், குரோஷியா-கேமரூன் அணிகள் மோதிய போட்டியில் கேமரூன் 4-0 என்ற கணக்கில் தோல்வியடைந்தது. இந்த போட்டியின்போது கேமரூன் வீரர்கள் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. அந்த நாட்டு கால்பந்து சம்மேளனம் இது குறித்து விசாரணை நடத்திவருகிறது.

இந்நிலையில் சர்வதேச கால்பந்து சம்மேளன, பாதுகாப்பு பிரிவு, இயக்குநர் ரல்ப் முட்ஸ்கே வெளியிட்டுள்ள அறிக்கையில், உலக கோப்பையின் நடப்பு தொடரில், இதுவரை 56 போட்டிகளை நடத்தியுள்ளோம். எந்த போட்டியிலும், சூதாட்டம் நடைபெற்றதற்கான ஆதாரம் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
Story first published: Thursday, July 3, 2014, 18:53 [IST]
Other articles published on Jul 3, 2014


Click it and Unblock the Notifications