தோல்வி நம்பர் 10… ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் சென்னையை துரத்தும் சோகம்.. நார்த் ஈஸ்ட்டிடம் தோல்வி

கவுகாத்தி:ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணி 1க்கு பூஜ்யம் என்ற கோல் கணக்கில் நடப்பு சாம்பியன் சென்னையின் எப்.சி.யை வீழ்த்தியது.

இந்தியன் சூப்பர் லீக் 61 வது கால்பந்து போட்டி கவுகாத்தியில் உள்ள இந்திரா காந்தி அதெலட்டிக் ஸ்டேடியத்தில் நடைபெற்றது. நார்த் ஈஸ்ட் யுனைட்டெட் எஃப்சி அணிக்கும் சென்னையின் எஃப்சி அணிக்கும் இடையேயான ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை அணி வலது புறம் இருந்து ஆட்டத்தை தொடங்கியது.

ஆட்டத்தின் 6 வது நிமிடத்தில் சென்னை அணியின் அன்ட்ரியாவுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. 12வது நிமிடத்தில் நார்த் ஈஸ்ட் அணியின் மிஸ்லேவுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது.

கடுமையாக மோதிக்கொண்ட வீரர்கள்

கடுமையாக மோதிக்கொண்ட வீரர்கள்

இரு அணிகளும் முதல் பாதி ஆட்டத்தின் 45 நிமிடங்களும் கடுமையாக மோதின. முதல் பாதியின் 44வது நிமிடத்தில் நார்த் ஈஸ்ட் அணிக்கு கோல் அடிக்க கிடைத்த வாய்ப்பை அந்த அணியினர் நழுவவிட்டனர். பின்னர் கூடுதலாக ஒரு நிமிடம் வழங்கப்பட்டது. அந்த ஒரு நிமிடத்திலும் இரு அணிகளும் கோல் அடிக்க வில்லை.

முதல் பாதியில் கோல் இல்லை

முதல் பாதியில் கோல் இல்லை

நார்த் ஈஸ்ட் அணியும், சென்னை அணியும் கோல் அடிக்காமலேயே ஆட்டத்தின் முதல் பாதி முடிந்தது. இதையடுத்து இதையடுத்து ஆட்டத்தின் இரண்டாவது பாதி ஆட்டம் தொடங்கியது. 50வது நிமிடத்தில் சென்னை அணிக்கு ஒரு கார்னர் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அதுவும் நழுவிப் போனது.

மாற்று வீரர்களின் முயற்சி

மாற்று வீரர்களின் முயற்சி

61வது நிமிடத்தில் சென்னை அணியின் ஆன்ட்ரியாவுக்கு பதிலாக அனிருத் தாப்பா களம் இறக்கப்பட்டார். 74 மற்றும் 75 ஆவது நிமிடங்களில் நார்த் ஈஸ்ட் அணியில் மாற்றம் செய்யப்பட்டது. இரு அணிகளிலும் வீரர்கள் மாற்றப் பட்டனர். 77வது நிமிடத்தில் மாற்று வீரராக தாய்சிங் களம் இறங்கினார்.

அற்புதமான கோல்

அற்புதமான கோல்

ஆட்டத்தின் 87 ஆவது நிமிடத்தில் நார்த் ஈஸ்ட் அணியின் பார்த்தோலோமெவ் ஓபேக்சே, அற்புதமாக ஒரு கோல் அடித்தார். 2வது பாதியும் முடிவடைய கூடுதலாக 4 நிமிடங்கள் வழங்கப்பட்டது.

பலன் அளிக்காத முயற்சி

பலன் அளிக்காத முயற்சி

அந்த நான்கு நிமிடங்களில் பதில் கோலடிக்க சென்னை அணி எவ்வளோ முயன்றும் பலன் கிடைக்கவில்லை. இதையடுத்து நார்த் ஈஸ்ட் அணி 1க்கு 0 என்ற கோல் கணக்கில் சென்னை அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    மைகேலில் பேன்டசி கால்பந்து விளையாடுங்க.. தினசரி பரிசு வெல்லுங்க.. உங்க நண்பர்களையும் சவாலுக்கு கூப்பிடுங்க!

    English summary
    North east united ogbeche helps hosts beat chennaiyin at home.
    Story first published: Sunday, January 27, 2019, 10:15 [IST]
    Other articles published on Jan 27, 2019
    + மேலும்
    POLLS

    myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற

    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Mykhel sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Mykhel website. However, you can change your cookie settings at any time. Learn more