Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஃபிபா உலகக் கோப்பை... அணிகள் அலசல் - ஆஸ்திரேலியாவுக்கு சாதகமாக எதுவுமே இல்லை!

சென்னை: 21வது ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷ்யாவில் நடக்கின்றன. ஜூன் 14ல் துவங்கி, ஜூலை 15 வரை நடக்கும் இந்த உலகக் கோப்பையில் 32 நாடுகள் பங்கேற்கின்றன. கோப்பையை வெல்வதற்காக அனைத்து அணிகளும் தயாராகி வருகின்றன.

2014ல் நடந்த உலகக் கோப்பையில் பங்கேற்ற நடப்பு சாம்பியன் ஜெர்மனி உள்பட 20 நாடுகள் இந்த உலகக் கோப்பைக்கு தகுதி பெற்றுள்ளன. பல்வேறு நிலைகளில் நடத்தப்பட்ட தகுதிச் சுற்று ஆட்டங்களில் வென்று, 31 அணிகள் உலகக் கோப்பைக்கு நுழைந்துள்ளன. போட்டியை நடத்துவதால் ரஷ்யா நேரடியாக தகுதி பெற்றுள்ளது.

nothing seems fvourable for australia in the fifa world cup

ஜெர்மனி, பிரான்ஸ், பிரேசில் இந்த உலகக் கோப்பையை வெல்லும் அணிகளாக கருதப்படுகின்றன. அதே நேரத்தில் அர்ஜென்டீனா, ஸ்பெயின், பெல்ஜியம் போன்ற அணிகளுக்கும் வாய்ப்பு உள்ளதாகக் கருதப்படுகிறது.

இந்த உலகக் கோப்பையில் பங்கேற்கும் அணிகளின் பலம், பலவீனம் குறித்து மைகேல் தமிழ் விரிவாக அலசுகிறது.
நாடு : ஆஸ்திரேலியா

சி பிரிவில் பிரான்ஸ், டென்மார்க், பெரு அணிகளுடன் இடம் பெற்றுள்ளது.

லீக் சுற்று ஆட்டங்கள் :
ஜூன் 16ல் பிரான்ஸ்
ஜூன் 21ல் டென்மார்க்
ஜூன் 26ல் பெரு

ஃபிபா தரவரிசை : 36

கடைசியாக பங்கேற்ற உலகக் கோப்பை : 2014 (பிரிவு சுற்றில் வெளியேறியது)

உலகக் கோப்பையில் சிறந்த இடம் : 2006ல் காலிறுதிக்கு முந்தைய சுற்று

முக்கிய வீரர்கள் : டிம் காஹில், மைல் ஜெட்நாக், ஆரோனா மூவே

கோச் : பெர்ட் வான் மார்விக்

ஆசிய சாம்பியனான ஆஸ்திரேலியா ஐந்தாவது முறையாக உலகக் கோப்பையில் விளையாட உள்ளது. தகுதிச் சுற்று ஆட்டங்களில் மிகவும் கடினமாக போராடி, கோச்சாக இருந்த ஆஞ்சே போஸ்டர்கோல்லூவை இழந்து, சிக்கி சின்னாப்பின்னமாகி ரஷ்யா வந்துள்ளது.

டென்மார்க் அணிக்காக உலகக் கோப்பையில் விளையாடியுள்ள மார்விக், சவூதி அரேபியாவுக்கு கோச்சாக இருந்தார். அந்த அணியும் தற்போது உலகக் கோப்பைக்கு வந்துள்ளது.

எப்படி ஆஸ்திரேலியாவை கரை சேர்ப்பது என்று அவர் யோசிக்கும் அதே நேரத்தில் அந்த அணிக்கு சாதகமாக எதுவுமே இல்லை. தடுப்பாட்டம் வீக், ஒருங்கிணைத்து ஆடுவதில்லை, அதைவிட மிகவும் வலுவான அணிகள் உள்ள பிரிவில் உள்ளது.

சிறந்த பார்மில் இருந்த முன்கள வீரரான ஜேமி மேக்லரெனுக்குப் பதிலாக சீனியரான காஹில் சேர்க்கப்பட்டுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

பீலே, மிரோஸ்லாவ் குளோஸ், உவே சீலர் ஆகியோருக்குப் பிறகு நான்கு உலகக் கோப்பைகளில் கோலடித்த வீரர் என்ற பெருமை கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பில் காஹில் உள்ளார்.

கோப்பை வெல்லக் கூடிய அணியாக கருதப்படும் பிரான்ஸ், மிகவும் வலுவான டென்மார்க், பெரு அணிகளுக்கு எதிராக இந்த ஒரு ஆறுதலுடன் ஆஸ்திரேலியா விடைபெறுவதற்கான வாய்ப்பே அதிகம் உள்ளது.

Story first published: Tuesday, June 12, 2018, 16:00 [IST]
Other articles published on Jun 12, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+