For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

8வது இடத்தில் இருக்கற அணியுடன் பலப்பரிட்சை... 2வது வெற்றிக்கு போராடும் ஒடிசா எப்சி!

பேம்போலிம் : ஐஎஸ்எல் 2020 -21 தொடரின் 79வது போட்டி கோவாவின் பேம்போலிம்மின் ஜிஎம்சி மைதானத்தில் இன்றைய தினம் நடைபெறவுள்ளது.

இதில் ஜாம்ஷெட்பூர் எப்சி மற்றும் ஒடிசா எப்சி அணிகள் இன்று பலப்பரிட்சையில் ஈடுபடவுள்ளன.

8வது இடத்தில் உள்ள ஜாம்ஷெட்பூர் அணியுடன் 11வது மற்றும் இறுதி இடத்தில் உள்ள ஒடிசா அணி இன்றைய போட்டியில் மோதவுள்ளது.

79வது போட்டி

79வது போட்டி

ஐஎஸ்எல் 2020-21 தொடரின் 79வது போட்டி கோவாவின் பேம்போலிம்மில் உள்ள ஜிஎம்சி மைதானத்தில் இன்றைய தினம் நடைபெறவுள்ளது. இதில் 8வது இடத்தில் உள்ள ஜாம்ஷெட்பூர் எப்சி அணியுடன் ஐஎஸ்எல் புள்ளிகள் பட்டியலில் இறுதி இடத்தில் உள்ள ஒடிசா அணி மோதவுள்ளது.

மோசமான ஆட்டங்கள்

மோசமான ஆட்டங்கள்

இந்த சீசனில் மிகவும் மோசமான ஆட்டங்களை தந்துள்ள ஒடிசா அணி இந்த போட்டியில் வெற்றி கொண்டால் தொடரின் இரண்டாவது வெற்றியை அளிக்கும். இந்த மாதத்தின் துவக்கத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணியை போராடி வெற்றி கொண்டு தனது முதல் வெற்றியை அந்த அணி பதிவு செய்தது. இந்த போட்டியில் வெற்றி கொண்டாலும் ஒடிசா அணி புள்ளிகளில் பின்தங்கியே காணப்படும்.

ஜாம்ஷெட்பூர் தீவிரம்

ஜாம்ஷெட்பூர் தீவிரம்

இந்நிலையில் இந்த போட்டியில் வெற்றி கொள்வதன்மூலம் அதிக புள்ளிகளை பெறும் தீவிரத்தில் ஜாம்ஷெட்பூர் அணி காணப்படுகிறது. கடந்த பெங்களூரு அணியுடன் கொண்ட வெற்றியை அடுத்து தொடர்ந்து 3 போட்டிகளில் அந்த அணி தோல்வியடைந்து வந்துள்ள நிலையில் இந்த வெற்றி அணிக்கு முக்கிய தேவையாக உள்ளது.

வெற்றி கொள்ள தீவிரம்

வெற்றி கொள்ள தீவிரம்

மேலும் அடுத்தடுத்த இரு போட்டிகளின் டிராவும் அணியை 8வது இடத்திற்கு பின்தள்ளியுள்ளது. இந்நிலையில் வலிமையற்ற நிலையில் காணப்படும் ஒடிசா அணியை இன்றைய போட்டியில் வெற்றி கொள்வதன்மூலம் ஜாம்ஷெட்பூர் அணி 6வது இடத்திற்கு முன்னேற முடியும்.

ஸ்டார் ஸ்போர்ட்சில் காணலாம்

ஸ்டார் ஸ்போர்ட்சில் காணலாம்

இன்றிரவு 7.30 மணியளவில் பேம்போலிம்மின் ஜிஎம்சி மைதானத்தில் நடைபெறவுள்ள இநத போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் டிசி சேனல்களில் கண்டு களிக்க முடியும். மேலும் டிஸ்னி + ஹாட்ஸ்டார் விஐபி மற்றும் ஜியோ டிவியிலும் கண்டுகளிக்கலாம்.

Story first published: Monday, February 1, 2021, 18:18 [IST]
Other articles published on Feb 1, 2021
English summary
Jamshedpur it can be very crucial as they will climb up to the sixth position
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+