Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பனாமாவை 2-1 என வென்றது.... 40 ஆண்டுகளுக்குப் பிறகு துனீஷியாவுக்கு முதல் வெற்றி!

சரான்ஸ்க்: ஃபிபா உலகக் கோப்பையில் இன்று நடந்த ஜி பிரிவு ஆட்டத்தில் 2-1 என பனாமாவை வென்று, 40 ஆண்டுகளுக்குப் பிறகு உலகக் கோப்பையில் முதல் வெற்றியைப் பெற்றது துனீஷியா.

21வது ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷ்யாவில் நடக்கின்றன. போட்டியில் பங்கேற்கும் 32 அணிகளும் தலா 4 அணிகள் என 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும் தனது பிரிவில் உள்ள மற்ற மூன்று அணிகளுடன் விளையாடும்.

ஏ பிரிவில் இருந்து ரஷ்யா, உருகுவே, பி பிரிவில் இருந்து ஸ்பெயின், போர்ச்சுகல், சி பிரிவில் இருந்து பிரான்ஸ், டென்மார்க், டி பிரிவில் இருந்து குரேஷியா, அர்ஜென்டினா, இ பிரிவில் இருந்து பிரேசில், சுவிட்சர்லாந்து, எப் பிரிவில் இருந்து ஸ்வீடன், மெக்சிகோ, ஜி பிரிவில் இருந்து பெல்ஜியம், இங்கிலாந்து, எச் பிரிவில் இருந்து கொலம்பியா, ஜப்பான் ஆகியவை நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியுள்ளன.

முதல் சுற்று லீக் ஆட்டங்கள் இன்றுடன் முடிந்தன. ஜி பிரிவில் இன்று நடந்த ஆட்டத்தில் துனீஷியா, பனாமாவை சந்தித்தது. மற்றொரு ஆட்டத்தில் இங்கிலாந்து, பெல்ஜியம் மோதின.

அதிக கோல்கள்

அதிக கோல்கள்

ஜி பிரிவில் நடந்த முதல் ஆட்டத்தில் பெல்ஜியம் 3-0 என பனாமாவை வென்றது. இங்கிலாந்து 2-1 என துனீஷியாவை வென்றது. மற்றொரு ஆட்டத்தில் துனீஷியாவை 5-2 என பெல்ஜியம் வென்றது. இங்கிலாந்து 6-1 என பனாமாவை வென்றது.

துனீஷியா, பனாமா வெளியேறியது

துனீஷியா, பனாமா வெளியேறியது

தற்போதைய நிலவரப்படி இங்கிலாந்து மற்றும் பெல்ஜியம் தலா 6 புள்ளிகளுடன் உள்ளன. அடுத்தச் சுற்றுக்கு இரண்டு அணிகளும் முன்னேறியுள்ளன. துனீஷியா மற்றும் பனாமா இரண்டு தோல்விகளை சந்தித்து பிரிவுச் சுற்றுடன் வெளியேறுகின்றன.

முதலிடம் யாருக்கு

முதலிடம் யாருக்கு

இன்று நடக்கும் இங்கிலாந்து, பெல்ஜியம் ஆட்டத்தின் முடிவில் தான், புள்ளிப் பட்டியலில் யார் முதலிடம் பிடிக்கப் போகிறார்கள் என்பது தெரியவரும். அதேபோல், யாருக்கு கடைசி இடம் என்பது துனீஷியா, பனாமா ஆட்டத்தில் தெரியவரும்.

40 ஆண்டுக்குப் பிறகு வெற்றி

40 ஆண்டுக்குப் பிறகு வெற்றி

முதல் முறையாக உலகக் கோப்பையில் விளையாடும் பனாமா, முதல் வெற்றியைப் பெற வேண்டும் என்ற நோக்கத்தில் விளையாடியது. அதே நேரத்தில் துனீஷியா 40 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் வெற்றியை எதிர்நோக்கி விளையாடியது. 1978ல் மெக்சிகோவுக்கு எதிராக துனீஷியா வென்றது. அதன்பிறகு விளையாடிய 13 ஆட்டங்களில் 9 தோல்வி, 4 டிரா செய்துள்ளது. இன்று நடந்த ஆட்டத்தில் 33வது நிமிடத்தில் மெரியா கோலடிக்க 1-0 என பனாமா முன்னிலை பெற்றது. 51வது நிமிடத்தில் பென் யூசப், 66வது நிமிடத்தில் காஸ்ரி கோலடிக்க 2-1 என துனீஷியா வென்றது. இதன் மூலம் 40 ஆண்டுகளுக்குப் பிறகு துனீஷியா வெற்றியை சுவைத்தது.

Story first published: Friday, June 29, 2018, 11:13 [IST]
Other articles published on Jun 29, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+