For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
இந்தியன் சூப்பர் லீக் கணிப்புகள்
VS

கால்பந்து கால்வாயில் கவிழ்ந்தது பனாமா.. 3-0 என உதைத்துத் துரத்தியது பெல்ஜியம்!

ஃபிபா உலகக் கோப்பை போட்டிகள் ரஷ்யாவில் நடக்கின்றன. இதில் ஜி பிரிவில் இன்று நடந்த ஆட்டத்தில் பெல்ஜியம் 3-0 என பனாமாவை வென்றது.

சோச்சி: 21வது ஃபிபா உலகக் கோப்பையில் ஜி பிரிவில் இன்று நடந்த ஆட்டத்தில் அறிமுக அணியான பனாமாவை 13வது முறையாக உலகக் கோப்பையில் விளையாடும் பெல்ஜியம் 3-0 என்ற கோல் கணக்கில் வென்றது.

21வது ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷ்யாவில் நடக்கின்றன. பல்வேறு நிலைகளில் நடத்தப்பட்ட தகுதிச் சுற்று ஆட்டங்களில் வென்று, 31 அணிகள் உலகக் கோப்பைக்கு நுழைந்துள்ளன. போட்டியை நடத்துவதால் ரஷ்யா நேரடியாக தகுதி பெற்றுள்ளது. 2014ல் நடந்த உலகக் கோப்பையில் பங்கேற்ற நடப்பு சாம்பியன் ஜெர்மனி உள்பட 20 நாடுகள் இந்த உலகக் கோப்பையிலும் பங்கேற்கின்றன.

panama no match to belgium in the fifa world cup

இந்த உலகக் கோப்பைக்கான போட்டிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. ஜி பிரிவில் இன்று இரண்டு ஆட்டங்கள் நடக்கின்றன. முதல் ஆட்டத்தில் பெல்ஜியம் 3-0 என பனாமாவை வென்றது. அடுத்த ஆட்டத்தில் துனீஷியாவுடன் இங்கிலாந்து விளையாடுகிறது.
----
பிரிவு ஜி
பெல்ஜியம் - பனாமா
3 - 0
----
* கடைசியாக விளையாடிய 9 பிரிவு சுற்று ஆட்டங்களில் பெல்ஜியம் தோல்வி அடைந்ததில்லை. கடைசியாக நடந்த நான்கு ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.

* 13வது முறையாக உலகக் கோப்பையில் விளையாடும் பெல்ஜியம், 1986ல் நான்காவது இடத்தைப் பிடித்தது. கடந்த உலகக் கோப்பையில் காலிறுதியில் விளையாடியது.

* பனாமா அணி முதல் முறையாக உலகக் கோப்பையில் விளையாடுகிறது.
--
உலகக் கோப்பையில் மிக நீண்ட அனுபவம் உள்ள பெல்ஜியம் 1986ல் நான்காவது இடத்தைப் பிடித்தது. கடந்த உலகக் கோப்பையில் கால் இறுதியில் அர்ஜென்டினாவிடம் தோல்வி அடைந்து வெளியேறியது.

முதல் முறையாக உலகக் கோப்பை போட்டியில் விளையாடும் வாய்ப்பை பனாமா பெற்றுள்ளது. அறிமுக அணியாக இருந்தாலும், உலகக் கோப்பையில் மிகவும் சீனியர்கள் உள்ள அணியாக பனாமா உள்ளது.

இன்று நடந்த ஜி பிரிவு முதல் ஆட்டத்தில் பனாமாவுடன் பெல்ஜியம் மோதியது. ஆட்டத்தின் முதல் விநாடி முதல் கடைசி வரை பெல்ஜியத்தின் ஆட்டம் மிகச் சிறப்பாக இருந்தது.

சின்ன அணியுடன் விளையாடுகிறோம் என்று சுவிட்சர்லாந்துக்கு எதிராக பிரேசில் சொதப்பியதுபோல் இல்லாமல், பெல்ஜியம் மிகவும் சிறப்பாக விளையாடியது.

ஆட்டத்தின் 62 சதவீத நேரம் பந்து பெல்ஜியம் அணியிடமே இருந்தது. அதில் 15 முறை கோலடிக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொண்டது. அதில் 6 முறை கோல் பகுதிக்கு பந்து செலுத்தப்பட்டது.

கிடைத்த ஒரு சில வாய்ப்பை பனாமா பயன்படுத்திக் கொண்டாலும் பெல்ஜியத்தின் ஆட்டத்துக்கு அந்த அணியால் ஈடுகொடுக்க முடியவில்லை.

ஆட்டத்தின் 47வது நிமிடத்தில் மெர்டன்ஸ் முதல் கோலை அடித்தார். அதன்பிறகு லுகாகு 69 மற்றும் 75 நிமிடங்களில் இரண்டு கோல்களை அடித்தார். இறுதியில் 3-0 என்ற கோல் கணக்கில் பனாமாவை பெல்ஜியம் வென்றது. இதன் மூலம் ஜி பிரிவில் 3 புள்ளிகளுடன் தற்போதைக்கு முதலிடத்தைப் பிடித்துள்ளது.

Story first published: Tuesday, June 19, 2018, 9:41 [IST]
Other articles published on Jun 19, 2018
English summary
Belgium beats debutant panama by 3-0 in the group g match in the fifa world cup.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+