Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

விருந்தாளிகளான வீரர்கள்.... பனாமா கோச்சின் சூப்பர் ஐடியா!

டெல்லி: பிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் முதல் முறையாக பங்கேற்கும் பனாமா அணி, சில வீரர்களை விருந்தாளிகளாக அழைத்துச் செல்கிறது. பனாமா கோச்சின் இந்த ஐடியாதான் தற்போது டாக் ஆப் த வோர்ல்ட் கப்.

பிபா உலகக் கோப்பை 2018, ரஷ்யாவில் வரும் 14ம் தேதி துவங்க உள்ளது. மொத்தம் 32 அணிகள் பங்கேற்கின்றன. இதில், மத்திய அமெரிக்க நாடான பனாமா, முதல் முறையாக உலகக் கோப்பையில் பங்கேற்க உள்ளது.

Panama taking 3 players as guests

அனைத்து அணிகளும், உலகக் கோப்பைக்கான வீரர்களின் பட்டியலை 4ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். ஒவ்வொரு நாடுகளும் பட்டியலை அறிவித்து வருகின்றன.

இந்த நிலையில், 23 வீரர்கள் கொண்ட அணியை பனாமாவின் தலைமை கோச் ஹெர்னான் கோமஸ் அறிவித்துள்ளார். இதில் பல முன்னணி வீரர்கள் என, எதிர்பார்க்கப்பட்ட வீரர்கள் பலரும் உள்ளனர்.

வீரர்கள் பட்டியலுடன் விருந்தாளிகளின் பட்டியலையும் அணிகள் அறிவிக்க வேண்டும். பனாமா வீரர்கள் ரோபர்டோ நர்ஸ், மிகுவைல் கமார்கோ, ரிகார்டோ அவிலா ஆகியோர் விருந்தாளிகள் பட்டியலில் உள்ளனர்.

ஜி பிரிவில் இடம்பெற்றுள்ள பனாமா 18ம் தேதி பெல்ஜியத்துடன் முதலில் விளையாடுகிறது. அதன் பிரகு இங்கிலாந்து, துனீஷியாவுடன் விளையாடுகிறது. இந்த மூன்று விருந்தாளி வீரர்கள், உலகக் கோப்பை போட்டியில் விளையாட முடியுமா என்பது தெளிவாக தெரிவிக்கப்படவில்லை.

Story first published: Friday, June 1, 2018, 14:04 [IST]
Other articles published on Jun 1, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+