For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கால்பந்து ஜாம்பவான் பீலேவின் தரமான 4 சம்பவங்கள்..காலத்தால் அழியாத சாதனை..பை சைக்கிள் கிக் முன்னோடி

சாவோ பாலோ : கால்பந்து ஜாம்பவான் பீலே காலமான நிலையில் அவருடைய சாதனைகளை நினைவு கூறும் விதமாக நமது தளத்தில் பல்வேறு செய்திகளை வெளியிட்டு இருக்கிறோம். இந்த நிலையில் கால்பந்து விளையாடிய வீரர்களில் ஆகச்சிறந்தவர் என்றால் அது ஏன் பீலே என்று பலரும் கூறுகிறார்கள் என்பதை தற்போது பார்க்கலாம்.

மெஸ்ஸி சிறந்தவரா, ரெனால்டோ சிறந்தவரா என்று பஞ்சாயத்து அடிக்கடி வரும் நிலையில் இருவரும் இணைந்து ஒரே வீரராக இருந்தால் எப்படி இருக்கும். அதுதான் பீலே!

தற்போது பீலே செய்த நான்கு பெரிய சம்பவங்களை பார்க்கலாம். பீலே தனது கால்பந்து வாழ்க்கையில் 1200 கோல்களுக்கு மேல் அடித்திருக்கிறார்.

முதல் உலக கோப்பை கோல்

முதல் உலக கோப்பை கோல்

தனது 17 ஆம் வயதில் உலககோப்பை கால்பந்து தொடரில் பங்கேற்றதன் மூலம் சிறுவயதில் உலக கோப்பையில் விளையாடிய வீரர் என்ற சாதனை படைத்தார் பீலே. அந்தத் தொடரில் தனது முதல் கோலை கால் இறுதி ஆட்டத்தை தான் அடித்தார். இதன் மூலம் ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் பிரேசில் அணி வெற்றி பெற்றது. பீலேவின் ஒரு கோலால் பிரேசில் வெற்றி பெற்றதை அடுத்து அவர் தேசிய ஹீரோ ஆனார்.

ஹாட்ரிக் சாதனை

ஹாட்ரிக் சாதனை

ஆனால் அது வெறும் டிரைலர் தான். பிரான்சுக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் பீலே ஹட்ரிக் கோல் அடித்தார். இதன் மூலம் உலகக்கோப்பை கால்பந்து வரலாற்றில் ஹாட்ரிக் கோல் அடித்த இளம் வீரர் என்ற சாதனையை பீலே படைத்தார்.இதில் பிரான்ஸ் அணி ஐந்துக்கு இரண்டு என்ற கோல் கணக்கில் தோல்வியை தழுவியது. பீலே அத்துடன் நிற்கவில்லை. இறுதிப்போட்டியில் இரண்டு ககளை அடிக்க பிரேசில் அணி ஐந்துக்கு இரண்டு என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

பைசைக்கிள் கிக்

பைசைக்கிள் கிக்

தனது 17 வயதில் இந்த சாதனையை படைத்த பீலே இந்த உணர்வு எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. நான் மீண்டும் இதை செய்ய விரும்புகிறேன் என்று பேட்டி அளித்தார். அத்திப்பூ பூற்றாற்போல் எப்போதாவது ஒருமுறைதான் இப்படி பீலே விளையாடுவார் என விமர்சனம் வைத்தவர்களுக்கு அடுத்த உலக கோப்பையிலே பதிலடி கொடுத்தார் பீலே.

1965 ஆம் ஆண்டு பெல்ஜியம் அணிக்கு எதிரான நட்பு ரீதியான ஆட்டத்தில் பீலே அடித்த பைசைக்கிள் கிக் ஷாட் உலகப் புகழ்பெற்றது. பீலேவின் இந்த சாட்டை பிறகு பல கால்பந்து வீரர்கள் காப்பி அடித்துக் கொண்டனர்.

பீலே மேஜிக்

பீலே மேஜிக்

பீலே சாண்டோஸ் அணிக்காக விளையாடி 92 முறை ஹார்ட்ரிக் கோல் அடித்து சாதனை படைத்திருக்கிறார்.பீலே பிரேசில் அணிக்காக 92 போட்டிகளில் விளையாடி இருக்கிறார். இதில் 67 போட்டிகளில் பிரேசில் அணி வெற்றியும், 14 ஆட்டத்தில் டிராவும், 11 போட்டியில் தோல்வியும் தழுவி இருக்கிறது. பீலேவும் கரின்ச்சாவும் இணைந்து விளையாடிய ஆட்டத்தில் பிரேசில் ஒரு முறை கூட தோல்வியை தழுவியது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Friday, December 30, 2022, 10:13 [IST]
Other articles published on Dec 30, 2022
English summary
Pele unbreakable achievement in football history
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+