Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உலக கோப்பை கால்பந்து பைனலில் உருகுவேவை பிரேசில் பழிதீர்க்க வேண்டும்- பீலே விருப்பம்

சாபவுலோ: உலககோப்பை கால்பந்தாட்ட பைனலில் உருகுவேயை பிரேசில் தோற்கடித்து பழி தீர்க்க வேண்டும் என்று கால்பந்தாட்ட ஜாம்பவான் பீலே தெரிவித்துள்ளார்.

வரும் 12ம்தேதி பிரேசிலில் உலக கோப்பை கால்பந்தாட்ட போட்டி தொடங்க உள்ளது. பிரேசிலின் முன்னாள் வீரரும் கால்பந்தாட்ட ஜாம்பவானுமான பீலேவிடம் பலம் பாய்ந்த பிரேசிலும், அர்ஜெண்டினாவும் பைனல் பந்தையத்தில் மோதினால் அனல் பறக்குமல்லவா என்று நிருபர்கள் கேட்டனர்.

Pele wants to Brazil avenging 'Maracanazo' in final

இதற்கு பதிலளித்த அவர், "நான் பிரேசிலும், உருகுவேவும்தான் பைனலில் மோத வேண்டும் என்று நினைப்பேன். 1950ல் நடந்த உலக கோப்பையில் பைனல் போட்டியில் உருகுவேயிடம் பிரேசில் தோற்றதற்கு இந்த பைனலின் பழி தீர்க்க வேண்டும் என்பதே எனது விருப்பம். பிரேசில் என்ற ஒரு நாடு உள்ளது உலக மக்களுக்கு தெரியவந்ததே கால்பந்தாட்டங்களால்தான். நான் 17 வயதில் கால்பந்தாட்ட அணிக்குள் வந்தேன். அப்போது பிரேசில் என்ற நாடு குறித்து பலருக்கும் தெரியாது. அர்ஜெண்டினாவையும், அமேசானையும் எங்கள் நாட்டுடன் குழப்பி கொள்வார்கள். பிரேசிலின் பெருமைக்கு கால்பந்து முக்கிய காரணம்" என்றார்.

1977ம் ஆண்டு கால்பந்தாட்ட போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற பீலே உடலில் இத்தனை வருடங்கள் ஆன பிறகும் கால்பந்தாட்ட வெறி குடிகொண்டிருப்பதற்கு உருகுவே மீதான ஆத்திரமே நல்ல சான்று.

Story first published: Monday, June 9, 2014, 17:37 [IST]
Other articles published on Jun 9, 2014
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+