Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அதெல்லாம் நடக்க வாய்ப்பே இல்லை.. தொடர்ந்து கோப்பை வெல்வது நடக்காது என்ற பெப் கார்டியோலா

லண்டன் : மான்செஸ்டர் சிட்டியின் தலைவர் பெப் கார்டியோலா, "99.99" சதவிகிதம் அது நடக்காது என்று கூறி, மீண்டும் இந்த கால்பந்து சீசனின் மூன்று கோப்பைகளையும் மான்செஸ்டர் சிட்டி வெல்வது பற்றிய பேச்சை நிராகரித்துள்ளார்.

கடந்த ஆண்டு சாம்பியனான மான்செஸ்டர் சிட்டி தொடர்ந்து தன் நான்காவது பிரீமியர் லீக் பட்டத்தை வெல்வதற்கு காத்திருக்கிறது. மேலும், சாம்பியன்ஸ் லீக் மற்றும் FA கோப்பையை தக்கவைத்துக்கொள்ள வலுவான போட்டியில் உள்ளனர்.

Pep Guardiola ‘99.99’ per cent certain Man City repeat treble will not happen

அந்த கோப்பைகளை அடுத்தடுத்த சீசன்களில் வெல்வது என்பது எதிர்பாராத ஒன்று. எனவே கடந்த ஆண்டில் கோப்பைகளை கைப்பற்றிய கார்டியோலா, இந்த முறை மான்செஸ்டர் சிட்டி ஐரோப்பிய சூப்பர் கோப்பை மற்றும் கிளப் உலகக் கோப்பையையும் சேர்த்து வெல்வது சாத்தியமில்லை என்று கருதுகிறார்.

"நாங்கள் இந்த முறை மூன்று கோப்பைகளை சேர்த்து வெல்லப் போவதில்லை என்பதற்கான 99.99 சதவீத வாய்ப்பு உள்ளது, ஏனெனில் அது எப்போதும் செய்யப்படவில்லை. மீண்டும் அதைச் செய்வதற்கான வாய்ப்புகள் இப்படித்தான் (கட்டை விரல் மற்றும் ஆள்காட்டி விரலுக்கு இடையில் சிறிய இடைவெளியைக் காட்டினார்) - குறைந்தபட்சமாக உள்ளது" என்றார்.

"இது எளிதாக விஷயமாக இருந்தால், முன்பு மற்றொரு அணியான மான்செஸ்டர் யுனைடெட் அதை மீண்டும் செய்திருக்கும். இது எளிதானது அல்ல. இந்த தொழிலில் இது மிகவும் கடினம். கடந்த காலத்தில் நாங்கள் என்ன செய்தோம் என்பது எதற்கும் உத்தரவாதம் இல்லை. எனக்கு பிடித்தது என்னவென்றால், நாங்கள் இன்னும் இந்த லீக்கில் முன்னணியில் இருக்கிறோம். நாங்கள் லீக்கில் முதலிடத்தை நெருங்கிவிட்டோம். மற்ற தொடர்களில் நாங்கள் முன்னணியில் இருக்கிறோம்." என்றார்.

"மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நாங்கள் அதே உணர்வுடன் வருவோம், அதே உணர்வு இருந்தால், மே மாதத்தில் கோப்பை வெல்ல போராடுவோம். இதுதான் எங்கள் இலக்கு." என்றார் பெப் கார்டியோலா.

சிட்டி தனது கடைசி ஒன்பது ஆட்டங்களில் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. அதனாலேயே அந்த அணி மீது எதிர்பார்ப்பு எகிறி இருக்கிறது.

Story first published: Saturday, February 10, 2024, 23:58 [IST]
Other articles published on Feb 10, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+