உலகக் கோப்பை கால்பந்து.. பெருவுக்கும் கிடைத்தது "பெர்த்"!
லிமா: அடுத்த ஆண்டு நடக்க உள்ள பிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் விளையாடும் வாய்ப்பை பெரு அணி பெற்றுள்ளது.
17 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை கால்பந்து போட்டி சமீபத்தில் இந்தியாவில் நடந்தது. பிபா உலகக் கோப்பை போட்டிகள் அடுத்த ஆண்டு, ஜூன் மாதத்தில் ரஷியாவில் நடக்க உள்ளது. இதில், ரஷியா உள்பட 32 அணிகள் பங்கேற்க உள்ளன.

இந்த உலகக் கோப்பை போட்டியில் விளையாடுவதற்கு, பிபாவில் பதிவு செய்துள்ள 209 நாடுகள் இடையே பல்வேறு கட்டங்களாக தகுதி சுற்று ஆட்டங்கள் நடந்தன.
ஏற்கனவே 31 அணிகள் தகுதி பெற்றுள்ள நிலையில், பெரு மற்றும் நியூசிலாந்து அணிகள் இடையேயான தகுதிச் சுற்று ஆட்டங்கள் நடந்தன. இதில் நியூசிலாந்தின் வெலிங்டனில் நடந்த ஆட்டம் 0-0 என டிராவில் முடிந்தது. இரண்டாவது ஆட்டம், பெருவின் லிமா நகரில் நேற்று நடந்தது. இதில் பெரு அணி 2-0 என்ற கோல் கணக்கில் வென்று உலகக் கோப்பை போட்டிக்கு கடைசி அணியாக தகுதி பெற்றுள்ளது.
பெரு அணி, கடைசியாக, 1982ல் நடந்த உலகக் கோப்பை போட்டியில் விளையாடியது. 36 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது மீண்டும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
உலகக் கோப்பையில் விளையாடும் அணிகள்
2018 உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்க உள்ள அணிகள் விவரம்:
ஐரோப்பாவில் இருந்து 14 அணிகள் பங்கேற்க உள்ளன. போட்டியை நடத்தும் ரஷியா, பெல்ஜியம், குரேஷியா, டென்மார்க், இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, ஐஸ்லாந்து, போலந்து, போர்ச்சுகல், செர்பியா, ஸ்பெயின், ஸ்வீடன், சுவிட்சர்லாந்து
தென் அமெரிக்காவில் இருந்து, அர்ஜென்டினா, பிரேசில், கொலம்பியா, பெரு, உருகுவே ஆகிய 5 அணிகளும், ஆசியாவில் இருந்து ஆஸ்திரேலியா, ஈரான், ஜப்பான், சவுதி அரேபியா, தென் கொரியா ஆகிய 5 அணிகளும் தகுதி பெற்றுள்ளன.
எகிப்து, மொராக்கோ, நைஜீரியா, செனகல், துனீஷியா ஆகிய ஐந்து ஆப்பிரிக்க நாடுகளும், கான்காகாப் எனப்படும் வடக்கு, மத்திய அமெரிக்கா மற்றும் கபீரியன் கால்பந்து கூட்டமைப்பு நாடுகளான கோஸ்டாரிகா, மெக்சிகோ, பனாமா ஆகியவையும் தகுதி பெற்றுள்ளன.
Story first published: Friday, November 17, 2017, 18:37 [IST]
Other articles published on Nov 17, 2017


Click it and Unblock the Notifications