Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஃபீஃபா' திருவிழாவில் விருது பெற்ற சூப்பர் ஹீரோக்கள்

ரியோடி ஜெனிரோ: பிரேசிலில் நடந்த ஃபீஃபா உலகக் கோப்பை நிறைவு விழாவில் விருது வாங்கியவர்களின் விவரங்களை பார்ப்போம்.

பிரேசிலில் நடந்த ஃபீஃபா உலகக் கோப்பை திருவிழா ஞாயிற்றுக்கிழமை இரவு நிறைவடைந்தது. இறுதிப் போட்டியில் ஜெர்மனி அர்ஜென்டினாவை 1-0 என்ற கோல் கணக்கில் வென்றது அடுத்த உலகக் கோப்பை போட்டிகள் நடக்கும் வரை கொண்டாடும்.

இந்நிலையில் இந்த தொடரில் விருது பெற்ற வீரர்கள் பற்றி பார்ப்போம்.

தங்க பந்து

தங்க பந்து

உலகக் கோப்பை தொடரில் 4 கோல்கள் அடித்த அர்ஜென்டினா வீரர் மெஸ்ஸிக்கு தங்க பந்து விருது கிடைத்தது.

தங்க க்ளவுஸ்

தங்க க்ளவுஸ்

ஜெர்மனியைச் சேர்ந்த கோல் கீப்பரான மானுவல் நெயூருக்கு தங்க கையுறை விருது கிடைத்தது. அவர் 25 பந்துகளை தடுத்து நிறுத்தியுள்ளார்.

ஆட்ட நாயகன்

ஆட்ட நாயகன்

இறுதிப் போட்டியில் அசத்தல் கோல் அடித்த ஜெர்மனி வீரர் மரியோ கோட்சேவுக்கு ஆட்ட நாயகன் விருது கிடைத்தது.

போக்பா

போக்பா

பிரான்ஸ் அணி வீரர் பால் போக்பாவுக்கு சிறந்த இளம் வீரருக்கான விருது கிடைத்தது.

தங்க பூட்

தங்க பூட்

உலகக் கோப்பை போட்டிகளில் 6 கோல்கள் அடித்த கொலம்பிய வீரர் ஜேம்ஸ் ரோட்ரிகஸ்ஸுக்கு தங்க ஷூ அதாவது கோல்டன் பூட் விருது கிடைத்தது.

நல்ல விளையாட்டு

நல்ல விளையாட்டு

சிறப்பாக விளையாடியதற்கான விருது கொலம்பியா அணிக்கு கிடைத்தது. கொலம்பியா காலிறுதிப் போட்டியில் பிரேசிலிடம் தோல்வி அடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Tuesday, July 15, 2014, 6:20 [IST]
Other articles published on Jul 15, 2014
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+