Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஃபீஃபா உலகக் கோப்பை: கில்லியாய் சொல்லி அடித்த கோல்கள்

சென்னை: நடந்து கொண்டிருக்கும் ஃபீஃபா உலகக் கோப்பையில் வீரர்கள் கோல் அடித்தவுடன் அதை கொண்டாடியதை பார்த்துள்ளீர்களா?

ஃபீஃபா உலகக் கோப்பை கால்பந்தாட்ட போட்டிகள் பிரேசிலில் நடந்து வருகிறது. இந்த போட்டிகளில் விளையாடும் அணிகள் கோல் அடித்த உடன் வீரர்கள் அதை கொண்டாடும் அழகை பார்த்துள்ளீர்களா?

இதோ உங்களுக்காக கோல் கொண்டாட்ட புகைப்படங்கள்.

நேமார்

நேமார்

கடந்த 12ம் தேதி சா பாலோவில் உள்ள இடாகுராவ் ஸ்டேடியத்தில் க்ரோஷியாவுக்கு எதிராக முதல் கோல் அடித்த பிறகு அதை கொண்டாடும் பிரேசில் அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் நேமார்.

மெஸ்ஸி

மெஸ்ஸி

கடந்த 15ம் தேதி ரியோடி ஜெனிரோ நகரில் உள்ள மரகானா ஸ்டேடியத்தில் போஸ்னியாவுக்கு எதிரான ஆட்டத்தின்போது கோல் அடித்த மகிழ்ச்சியில் அர்ஜென்டினாவின் லயனல் மெஸ்ஸி.

மிரஸ்லாவ் குளோஸ்

மிரஸ்லாவ் குளோஸ்

கடந்த 21ம் தேதி போர்ட்லெசாவில் உள்ள அரினா காஸ்டெலாவில் கானாவுக்கு எதிரான போட்டியில் ஜெர்மனி வீரர் மிரஸ்லாவ் குளோஸ் கோல் அடித்ததை இப்படி கொண்டாடினார்.

அல்ஜீரியா

அல்ஜீரியா

ஜூன் 17ம் தேதி பெலோ ஹரிசான்டே நகரில் உள்ள மினீராவ் ஸ்டேடியத்தில் பெல்ஜியம் அணியுடன் அல்ஜீரியா மோதியது. அப்போது அல்ஜீரிய வீரர் சோபியான் பெகௌலி கோல் போட்டதை அந்த அணி வீரர்கள் இப்படி கொண்டாடினார்கள்.

டிம்

டிம்

ஜூன் 13ம் தேதி குயாபாவில் உள்ள அரினா பன்டனாலில் சிலி அணிக்கு எதிராக கோல் போட்டதை ஆஸ்திரேலிய வீரர் டிம் கஹில் துள்ளிக் குதித்து கொண்டாடினார்.

எடின்சன் கவானி

எடின்சன் கவானி

ஜுன் 14ம் தேதி போர்ட்லசாவில் உள்ள அரினா காஸ்டெலாவில் காஸ்டாரிகாவுக்கு எதிராக பெனால்ட்டி ஷாட் அடித்ததை உருகுவே வீரர் எடின்சன் கவானி இப்படி உயரக் குதித்து கொண்டாடினார்.

கரிம் பென்சிமா

கரிம் பென்சிமா

ஜூன் 15ம் தேதி போர்டோ அலெக்ரேவில் உள்ள எஸ்டடியோ பீரா ரியோ ஸ்டேடியத்தில் நடந்த போட்டியின்போது ஹோண்டுராஸுக்கு எதிராக கோல் போட்ட பிரான்ஸ் வீரர் கரிம் பென்சிமா தனது வெற்றியை கொண்டாடினார்.

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியா

ஜூன் 18ம் தேதி நெதர்லாந்துக்கு எதிராக விளையாடிய ஆஸ்திரேலியா இரண்டாவது கோல் அடித்ததை அந்த அணி வீரர்கள் இப்படி கொண்டாடினர்.

டெம்சி

டெம்சி

ஜூன் 16ம் தேதி அமெரிக்கா, கானா அணிகள் மோதின. ஆட்டம் துவங்கிய 29வது நொடியில் அமெரிக்காவின் கிளின்ட் டெம்ஸி கோல் அடித்து அசத்தியதை மகிழ்ச்சி ஆரவாரம் செய்து கொண்டாடினார்.

ஹோண்டுராஸ்

ஹோண்டுராஸ்

ஜூன் 20ம் தேதி ஈகுவடாருக்கு எதிராக கோல் அடித்த சந்தோஷத்தில் ஹோண்டுராஸ் வீரர் கார்லோ காஸ்ட்லி.

ஜெர்மைன் ஜோன்ஸ்

ஜெர்மைன் ஜோன்ஸ்

ஜூன் 22ம் தேதி அமெரிக்கா மற்றும் போர்ச்சுகல் அணிகள் மோதின. அப்போது அமெரிக்காவின் ஜெர்மைன் ஜோன்ஸ் தான் கோல் அடித்த கையோடு துள்ளிக் குதித்தார்.

இஸ்லாம் ஸ்லிமானி

இஸ்லாம் ஸ்லிமானி

ஜூன் 22ம் தேதி தென்கொரியாவுக்கு எதிரான போட்டியில் கோல் அடித்த அல்ஜீரியாவின் இஸ்லாம் ஸ்லிமானி தனதை தலையை தரையில் வைத்து கடவுளுக்கு நன்றி கூறினார்.

ஹாரிஸ்

ஹாரிஸ்

ஜூன் 15ம் தேதி ஈகுவடாருக்கு எதிரான போட்டியில் சுவிட்சர்லாந்து வீரர் ஹாரிஸ் செபரோவிக் போட்டி முடிய 30 நொடிகள் இருக்கும்போது கோல் அடித்தார்.

ஆஸ்கர்

ஆஸ்கர்

ஜூன் 12ம் தேதி பிரேசில் மற்றும் க்ரோஷியா அணிகள் மோதிய போட்டியில் பிரேசில் வீரர் ஆஸ்கர் கோல் அடித்த பிறகு இப்படி போஸ் கொடுத்தார்.

ரஃபீக்

ரஃபீக்

ஜூன் 22ம் தேதி தென்கொரியாவுக்கு எதிரான போட்டியில் அல்ஜீரிய வீரர் ரஃபீக் ஹாலிசே கோல் அடித்ததை பறந்து கொண்டாடினார்.

மர்சிஸியோ

மர்சிஸியோ

ஜூன் 14ம் தேதி இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இத்தாலி அணி வீரர் கிளாடியோ மர்சிஸியோ கோல் அடித்த உற்சாகத்தில்...

கிரௌட்

கிரௌட்

ஜூன் 20ம் தேதி சுவிட்சர்லாந்து மற்றும் பிரான்ஸ் அணிகள் மோதின. அப்போது பிரான்ஸ் வீரர் ஒலிவியர் கிரௌட் கோல் அடித்துவிட்டு சக வீரர்களை நோக்கி ஓடி வந்தார்.

ரோட்ரிகஸ்

ரோட்ரிகஸ்

ஜூன் 14ம் தேதி கிரீஸுக்கு எதிரான போட்டியில் கோல் அடித்ததை கொலம்பியா அணி வீரர் ஜேம்ஸ் ரோட்ரிகஸ் சக வீரர்களுடன் கொண்டாடினார்.

வாலன்சியா

வாலன்சியா

ஜூன் 20ம் தேதி ஹோண்டுராஸ் மற்றும் ஈகுவடார் அணிகள் மோதின. அப்போது ஈகுவடார் வீரர் என்னர் வாலன்சியா கோல் அடித்ததை இப்படி கொண்டாடினார்.

மார்கோ

மார்கோ

ஜூன் 14ம் தேதி உருகுவே, காஸ்டாரிகா அணிகள் மோதின. அந்த போட்டியில் கோல் அடித்த காஸ்டாரிகா வீரர் மார்கோ உரெனா...

Story first published: Tuesday, June 24, 2014, 9:23 [IST]
Other articles published on Jun 24, 2014
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+