Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உலகத்தை ஈர்த்த குரேஷிய பெண் அதிபர்.... உடனே போட்டாங்கப்பா ஒரு குண்டு!

டெல்லி: ரஷ்யாவில் நடந்த உலகக் கோப்பை போட்டியில் பரபரப்பான ஆட்டங்கள், கோல்கள், பிரபலமான வீரர்கள் இதையெல்லாம் தாண்டி அதிகம் பேசப்பட்டவர், குரேஷிய பெண் அதிபர் கோலிண்டா கிராபர் கிடரோவிக். உடனே ஒரு குண்டை தூக்கி போட்டுட்டாங்க.

ரஷ்யாவில் நடந்த 21-வது உலகக் கோப்பையின் பைனலுக்கு நுழைந்து புதிய வரலாறு படைத்தது குரேஷியா. லீக் ஆட்டங்கள் முதல் அரை இறுதி வரை ஒன்றில் கூட தோற்கவில்லை.

 picture of croatian president in bikini goes viral

பைனல் வந்ததை குரேஷிய மக்கள் கொண்டாடி வருகின்றனர். குறிப்பாக குரேஷிய பெண் அதிபர் கோலிண்டா கிராபர் கிடரோவிக் மிகுந்த உற்சாகத்துடன் இருந்தார்.

50 வயதாகும் கிடரோவிக், நாக் அவுட் ஆட்டங்களில் குரேஷியா வென்றபோது, காலரியில் குதித்து, கைதட்டி மகிழ்ந்தது பெரும் வரவேற்பை பெற்றது.

வீரர்கள் அறைக்கு சென்று அவர்களுடன் கொண்டாடினார் கிடரோவிக். டான்ஸ் ஆடியும், வீரர்களை கட்டித் தழுவியும் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

பைனல் முடிந்த பிறகு நடந்த நிகழ்ச்சியின்போது, மழை பெய்தபோதும், அவர் நனைந்தபடியே மகிழ்ச்சியில் திளைத்தார். குரேஷியா மற்றும் பிரான்ஸ் வீரர்களை கட்டித் தழுவி தனது பாராட்டை தெரிவித்தார்.

ஒரு நாட்டின் அதிபர் இவ்வளவு உற்சாகமாக வீரர்களை ஊக்குவித்து வருவது உலகெங்கும் பாராட்டை பெற்றது. சமூகதளங்களில் அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

இந்த நிலையில், பிகினி உடையில் கிடரோவிக் இருப்பது போன்ற படங்களும் சமூகதளங்களில் வெளியிடப்பட்டன. ஆனால் அது கிடரோவிக் இல்லை. அமெரிக்காவைச் சேர்ந்த மாடலும், ராப் பாடக் ஐஸ் டியின் மனைவி கோகோ ஆஸ்டின் என்பது தெரியவந்தது.

Story first published: Tuesday, July 17, 2018, 12:15 [IST]
Other articles published on Jul 17, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+