Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆகாயத்திலும் ராணுவ பாதுகாப்பா??.. ஜெட்களுடன் வந்து கெத்துக்காட்டிய போலந்து அணி.. காரணம் என்ன??

கத்தார்: ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடருக்காக சென்ற போலந்து நாட்டு அணிக்கு வானிலும் ராணுவ பாதுகாப்பு வழங்கப்பட்டது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

சர்வதேச கால்பந்து கூட்டமைப்பான ஃபிஃபா 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை உலகக்கோப்பை கால்பந்து தொடரை நடத்தி வருகிறது. கால்பந்து ரசிகர்களுக்கு இது திருவிழா என்றே கூறலாம்.

அந்தவகையில் 22வது உலகக்கோப்பை கால்பந்து தொடர் இந்த வருடம் கத்தாரில் வரும் நவம்பர் 20ம் தேதி முதல் தொடங்குகிறது. மொத்தம் 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடைபெறவுள்ளன.

ராணுவ பாதுகாப்பு

ராணுவ பாதுகாப்பு

இதற்காக அனைத்து நாட்டு அணிகளும் கத்தாரை நோக்கி புறப்பட்டு வருகின்றனர். அந்தவகையில் போலந்து அணி சென்ற விதம் தான் ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை கொடுத்துள்ளது. வழக்கம் போல பயணிகள் விமானத்தில் தான் அந்த அணி பயணித்தது. ஆனால் நடு வானில் விமானத்திற்கு இருபுறம் F -16 வகை ராணுவ ஜெட்கள் பாதுகாப்பு கொடுத்து வந்தது.

ரசிகர்களுக்கு குழப்பம்

ரசிகர்களுக்கு குழப்பம்

அடேங்கப்பா.. ஒரு விளையாட்டு அணிக்கு ஆகாயத்திலும் ராணுவ பாதுகாப்பா? அப்படி என்ன பிரச்சினை ஏற்பட்டுவிடப்போகிறது? இந்த தொடர் பாகிஸ்தான் போன்று பயங்கரவாத அச்சுறுத்தல் உள்ள நாட்டில் நடந்தால் கூட ஓரளவிற்கு ஏற்றுக்கொள்ளலாம் என ரசிகர்கள் குழம்பியுள்ளனர். ஆனால் இவ்வளவு பாதுகாப்பிற்கும் உக்ரைன் - ரஷ்யா போர் தான் காரணம் என்றால் நம்ப முடிகிறதா?

என்ன காரணம்

என்ன காரணம்

ரஷ்யா - உக்ரைன் நாடுகளுக்கு இடையே கடந்த 8 மாதங்களாக போர் நடைபெற்று வருகின்றன. இப்படி இருக்கையில் சமீபத்தில் போலந்து நாட்டிற்குள் S -300 ரக ஏவுகணை தாக்குதல் நடைபெற்றது. இதில் இருவர் உயிரிழந்தனர். இது முதலில் ரஷ்யா செய்த காரியம் எனக்குற்றம் சாட்டப்பட்ட நிலையில், பின்னர் உக்ரைன் செய்தது நிரூபணமானது.

உற்சாக வரவேற்பு

உற்சாக வரவேற்பு

நோட்டோ அமைப்பின் உறுப்பினராக இருக்கும் போலந்து நாட்டில் இந்த ஏவுகணை தாக்குதால் சற்று பதற்றம் ஏற்பட்டுள்ளது. எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக் போலாந்து அணி சென்ற விமானத்திற்கு பாதுகாப்பாக ராணுவ ஜெட்கள் பறக்கவிடப்பட்டுள்ளன.

Story first published: Friday, November 18, 2022, 11:09 [IST]
Other articles published on Nov 18, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+