Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நாக் அவுட் சுற்றில் ரொனால்டோவின் அணி.... ஈரானுக்கு எதிராக 1-1 என டிரா செய்தது போர்ச்சுகல்!

சாரன்ஸ்க்: 21வது ஃபிபா உலகக் கோப்பையில் இன்று நடந்த ஆட்டத்தில் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் போர்ச்சுகல் 1-1 என ஈரானுக்கு எதிராக டிரா செய்தது. இதன் மூலம் நாக் அவுட் சுற்று முன்னேறியது போர்ச்சுகல்.

21வது ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷ்யாவில் நடக்கின்றன. போட்டியில் பங்கேற்கும் 32 அணிகளும் தலா 4 அணிகள் என 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும் தனது பிரிவில் உள்ள மற்ற மூன்று அணிகளுடன் விளையாடும்.

அதன்படி ஒவ்வொரு அணியும் இரண்டு ஆட்டங்களை முடித்துள்ளன. ஏ பிரிவில் இருந்து ரஷ்யா, உருகுவே, சி பிரிவில் இருந்து பிரான்ஸ், டி பிரிவில் இருந்து குரேஷியா, எப் பிரிவில் இருந்து மெக்சிகோ, ஜி பிரிவில் இருந்து பெல்ஜியம், இங்கிலாந்து ஆகியவை ஏற்கனவே அடுத்தச் சுற்றுக்கு முன்னேறியுள்ளன.

இன்று பிரிவு சுற்றில் மூன்றாவது ஆட்டங்கள் துவங்குகின்றது. இதில் பி பிரிவில் நடக்கும் முதல் ஆட்டத்தில் மொராக்கோவை சந்தித்தது ஸ்பெயின். அதற்கடுத்த ஆட்டத்தில் ஈரானை சந்தித்தது போர்ச்சுகல்

ரொனால்டோவுடன் டிரா

ரொனால்டோவுடன் டிரா

பி பிரிவில் நடந்த முதல் ஆட்டத்தில் ஈரான் 1-0 என மொராக்கோவை வென்றது. ரொனால்டோவின் போர்ச்சுகல் மற்றும் ஸ்பெயின் ஆட்டம் 3-3 என டிராவானது. அதற்கடுத்து போர்ச்சுகல் 1-0 என மொராக்கோவை வென்றது. ஸ்பெயின் 1-0 என ஈரானை வென்றது.

மொராக்கோ அவுட்

மொராக்கோ அவுட்

தற்போதைய நிலையில் ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகல் தலா 4 புள்ளிகளுடன் உள்ளன. ஈரான் 3 புள்ளிகளுடன் உள்ளது. இரண்டு ஆட்டங்களில் தோல்வியடைந்த மொராக்கோ முதல் சுற்றுடன் வெளியேறுகிறது.

சாதிப்பாரா ரொனால்டோ

சாதிப்பாரா ரொனால்டோ

இதுவரை நடந்த இரண்டு ஆட்டங்களிலும் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ தனிமனிதனாக போர்ச்சுகல் அணியை தாங்கிப் பிடித்துள்ளார். இந்த உலகக் கோப்பையில் அர்ஜென்டினாவின் லியோனல் மெஸ்ஸி, பிரேசிலில் நெய்மர், எகிப்தின் மொகம்மது சலா உள்ளிட்ட முக்கிய வீரர்கள் ஏமாற்றிய நிலையில், போர்ச்சுகல்லின் ரொனால்டோ கலக்கி வருகிறார். இதுவரை 4 கோல்களை அடித்துள்ளார்.

போர்ச்சுகலுக்கு வாய்ப்பு

போர்ச்சுகலுக்கு வாய்ப்பு

பி பிரிவில் இன்று நடந்த ஆட்டத்தில் ரொனால்டோவின் போர்ச்சுகல் ஈரானை சந்தித்தது. இந்த ஆட்டத்தின் 45வது நிமிடத்தில் ரிகார்டோ குவேரெஸ்மா கோல் அடிக்க போர்ச்சுகல் முன்னிலை பெற்றது. 93வது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி ஈரானின் அன்சார்பிராட் கோலடித்து சமநிலையை உருவாக்கினார். இறுதியில் ஆட்டம் 1-1 என டிராவானது. 5 புள்ளிகள் பெற்ற போர்ச்சுகல் பி பிரிவில் இருந்து நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது.

Story first published: Tuesday, June 26, 2018, 9:17 [IST]
Other articles published on Jun 26, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+