போர்ச்சுகல் கால்பந்து வீரர் ரொனால்டோவிற்கு கொரோனா பாதிப்பு.. தனிமைப்படுத்திக் கொண்டார்!

லிஸ்போன்: போர்ச்சுகல் கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவிற்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

உலகம் முழுக்க கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது. உலகம் முழுக்க இதுவரை 38,157,782 பேர் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் போர்ச்சுகல் அணியின் கால்பந்து வீரர் ரொனால்டோவிற்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இன்று போர்ச்சுகல் அணி வீரர்களுக்கு கொரோனா சோதனை செய்யப்பட்ட நிலையில் ரொனால்டோவிற்கு கொரோனா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. போர்ச்சுகல் தேசிய லீக் போட்டிகளில் ஆட இருந்த ரொனால்டோவிற்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.

இதனால் அந்த தொடரில் இருந்து தற்போது ரொனால்டோ விலகி உள்ளார். நாளை ஸ்வீடன் அணிக்கும் போர்ச்சுகல் அணிக்கும் இடையில் கால் பந்து போட்டி நடக்க இருந்தது. இந்த நிலையில் ரொனால்டோவிற்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா இருந்தா என்னங்க... உலக சுற்றுலா தினத்தை எப்படி கொண்டாடுறேன் பாருங்க

ரொனால்டோவிற்கு அறிகுறி இல்லாமல் கொரோனா ஏற்பட்டுள்ள நிலையில், தற்போது அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். ஆனால் போர்ச்சுகல் அணியில் வேறு யாருக்கும் கொரோனா இல்லாத நிலையில் நாளை போர்ச்சுகல் அணி எப்போதும் போல ஸ்வீடனை எதிர்கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

மைகேலில் பேன்டசி கால்பந்து விளையாடுங்க.. தினசரி பரிசு வெல்லுங்க.. உங்க நண்பர்களையும் சவாலுக்கு கூப்பிடுங்க!

English summary
Portugal football superstar Cristiano Ronaldo tests positive for Coronavirus today.
Story first published: Tuesday, October 13, 2020, 20:33 [IST]
Other articles published on Oct 13, 2020
+ மேலும்
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X