Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மக்களே கோல் மழைக்கு தயாராகுங்க.... ரொனால்டோவை சமாளிக்குமா மொராக்கோ!

portugal to meet morocco in the fifa world cup

மாஸ்கோ: 21வது ஃபிபா உலகக் கோப்பையில் பிரிவு சுற்று ஆட்டங்களில் அணிகளின் இரண்டாவது ஆட்டம் துவங்கியுள்ளது. இதில் பி பிரிவில் இன்று நடக்கும் ஆட்டத்தில் ரொனால்டோவின் போர்ச்சுகல்லை சந்திக்கிறது மொராக்கோ.

21வது ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷ்யாவில் நடக்கின்றன. பல்வேறு நிலைகளில் நடத்தப்பட்ட தகுதிச் சுற்று ஆட்டங்களில் வென்று, 31 அணிகள் உலகக் கோப்பைக்கு நுழைந்துள்ளன. போட்டியை நடத்துவதால் ரஷ்யா நேரடியாக தகுதி பெற்றுள்ளது. 2014ல் நடந்த உலகக் கோப்பையில் பங்கேற்ற நடப்பு சாம்பியன் ஜெர்மனி உள்பட 20 நாடுகள் இந்த உலகக் கோப்பையிலும் பங்கேற்கின்றன.

இந்த உலகக் கோப்பைக்கான போட்டிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. 32 அணிகளும் தலா 4 அணிகள் என 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும் தனது பிரிவில் உள்ள மற்ற மூன்று அணிகளுடன் விளையாடும்.

அதன்படி ஒவ்வொரு அணியும் ஒரு ஆட்டத்தை விளையாடியுள்ளன. பி பிரிவில் இன்று நடக்கும் ஆட்டத்தில் மொராக்கோவும், போர்ச்சுகல்லும் விளையாடுகின்றன.
----
பிரிவு பி
போர்ச்சுகல் - மொராக்கோ
போட்டி நடக்கும் நேரம் - இந்திய நேரப்படி மாலை 5.30 மணி
----
பி பிரிவில் இதுவரை...

* ஈரான் 1-0 என மொராக்கோவை வென்றது
* போர்ச்சுகல் மற்றும் ஸ்பெயின் ஆட்டம் 3-3 என டிராவானது.

பி பிரிவின் புள்ளிப் பட்டியலில் ஈரான் 3 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. போர்ச்சுகல் மற்றும் ஸ்பெயின் தலா 1 புள்ளியைப் பெற்றுள்ளன. மொராக்கோ புள்ளி ஏதும் பெறவில்லை.
-----
பி பிரிவில் நடந்த முதல் ஆட்டத்தில் மொராக்கோ சேம் சைடு கோல் அடிக்க 1-0 என ஈரான் வென்றது.

அந்த ஆட்டத்தில் மொராக்கோ அணியின் பக்கமே பந்து அதிக நேரம் இருந்தது. கிட்டத்தட்ட 69 சதவீத நேரம் மொராக்கோ வீரர்களிடமே பந்து இருந்தது. அனைத்து விதத்திலும் ஈரானை விட மொராக்கோ முன்னிலையில் இருந்தது. டிராவில் முடியும் என்று நினைக்கப்பட்ட நிலையில், ஆட்டத்தின் கடைசி நிமிடத்தில் மொராக்கோவின் போஹாதூஸ் சேம் சைட் கோலடிக்க, ஈரான் வென்றது. உலகக் கோப்பையில் ஈரானுக்கு கிடைத்த இரண்டாவது வெற்றி இதுவாகும்.

பி பிரிவில் நடந்த இரண்டாவது ஆட்டத்தில் ஸ்பெயினுடன் கிறிஸ்டியானோ ரொனால்டோ மோதினார் என்று கூறும் அளவுக்கு தனி ஆளாக போர்ச்சுகல் அணியை தூக்கிப் பிடித்தார் ரொனால்டோ. இந்த உலகக் கோப்பையின் மிகவும் முக்கியமான ஆட்டங்களில் ஒன்றாக கருதப்படும் அந்த ஆட்டத்தின் 4வது நிமிடம் பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி ரொனால்டோ கோலடித்தார்.

24வது நிமிடத்தில் டியாஜோ கோஸ்டா கோலடித்து சமநிலையை உருவாக்கினார். பின்னர் 44வது நிமிடத்தில் ரொனால்டோ மற்றொரு கோலை அடித்தார். 55வது நிமிடத்தில் ஸ்பெயினின் கோஸ்டா மற்றொரு கோலடிக்க இரு அணிகளும் 2-2 என சம நிலையில் இருந்தன.

58வது நிமிடத்தில் நாசோ கோலடிக்க ஸ்பெயின் 3-2 என முன்னிலை பெற்றது. ஆட்டம் முடிய சில நிமிடங்களே இருக்கையில், 88வது நிமிடத்தில் ஹாட்ரிக் கோலடித்து சமநிலையை உருவாக்கினார் ரொனால்டோ. இதையடுத்து ஆட்டம் டிராவில் முடிந்தது.

மெஸ்ஸி, நெய்மர் போன்ற நட்சத்திர வீரர்கள் ஏமாற்றிய நிலையில், ரொனால்டோ 51வது முறையாக ஹாட்ரிக் அடித்து அசத்தினார். இன்று நடைபெறும் மொராக்கோவுக்கு எதிரான ஆட்டம், போர்ச்சுகல் அணிக்கே சாதகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Wednesday, June 20, 2018, 9:16 [IST]
Other articles published on Jun 20, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+