Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐ-லீகுக்கு முன்னேறியது ரியல் காஷ்மீர் எப்சி!

பெங்களூரு: ஐ-லீக் கால்பந்து போட்டியின் 2-வது டிவிஷனில் விளையாடும் ரியல் காஷ்மீர் எப்சி, ஐ லீகுக்கு முன்னேறியது.

ஐ-லீக் கால்பந்து 2-வது டிவிஷன் போட்டிகள் பெங்களூரில் நடந்தன. இதில், நேற்று நடந்த கடைசி ஆட்டத்தில் ஹிந்துஸ்தான் எப்சி அணியை 3-2 என்ற கோல் கணக்கில் ரியல் காஷ்மீர் எப்சி வென்றது.

promotion for real kashmir fc

இதன் மூலம் 2-வது டிவிஷன் போட்டிகளில் 7 புள்ளிகள் பெற்று சாம்பியனானது. மேலும் ஐ-லீக் போட்டிகளில் விளையாடும் தகுதியைப் பெற்றது. ஐ லீக் சுற்றுக்கு முன்னேறியுள்ள ஜம்மு காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த முதல் கால்பந்து கிளப் என்ற பெருமையை ரியல் காஷ்மீர் எப்சி பெற்றுள்ளது.

நேற்று நடந்த ஆட்டத்தில் ஒரு புள்ளியைப் பெற்றாலே இந்த சீசன் சாம்பியனாக முடியும் என்ற நிலையில், 3-2 என்ற கோல் கணக்கில் வென்று 3 புள்ளிகளைப் பெற்றது ரியல் காஷ்மீர் எப்சி.

அந்த அணியின் தாரிக் மிர் (22வது நிமிடம்), டேனிஷ் பரூக் (42வது நிமிடம்), நடாங்க் பூட்டியா (67வது நிமிடம்) கோலடித்தனர். ஹிந்துஸ்தான் எப்சியின் குஷாந்த் சவுகான் 34 மற்றும் 80வது நிமிடங்களில் கோலடித்தார்.

Story first published: Thursday, May 31, 2018, 10:07 [IST]
Other articles published on May 31, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+