இது லிஸ்டிலே இல்லையே.. FIFA உலககோப்பையில் ரசிகர்களுக்கு கடும் கட்டுப்பாடு.. மெயின் மேட்டருக்கு தடை
கத்தார் : 2022 ஃபிஃபா உலககோப்பை கத்தாரில் வரும் 20ஆம் தேதி முதல் தொடங்கி வரும் டிசம்பர் 18ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இந்த தொடரில் பிரேசில், போர்ச்சுகல், ஆர்ஜென்டினா, இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட 32 அணிகள் பங்கேற்கிறது. இதற்காக கத்தாரில் 8 பிரம்மாண்ட மைதானங்கள் கட்டப்பட்டன.
ஃபிஃபா போட்டியை காண கத்தாரில் சுமார் 10 லட்சம் வெளிநாட்டு ரசிகர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் கத்தார் நாடு முழுவதுமே திருவிழாக் கோலம் பூண்டுள்ளது.

கடும் விதிமுறைகள்
இந்த நிலையில், கத்தார் இஸ்லாமிய நாடு என்பதால், அந்த நாட்டு சட்ட திட்டங்களுக்கு ஏற்ற வகையில் பல்வேறு விதிமுறைகள் ரசிகர்களுக்கு விதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, ஒரின சேர்க்கையாளர்களுக்கு கத்தார் தடை விதித்துள்ளது. கால்பந்து மைதானங்களில் ஒரின சேர்க்கையாளர்கள், தங்களுடைய உரிமைகளுக்கு குரல் கொடுக்கும் ஒரு இடம் ஐரோப்பாவில் பயன்படுத்து வருகின்றன. இதற்காக வானவில் கொடியை ஏந்தி போட்டியை ஒரின சேர்க்கையாளர்கள் ஜோடியாக பார்ப்பது வழக்கம்.

மீறினால் சிறை
ஆனால், கத்தார் இஸ்லாமிய நாடு என்பதால், ஒரின சேர்க்கைக்கு அங்கு தடை உள்ளது. இதனால், வானவில் கொடியை ஏந்தி மைதானத்திற்கு வர ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறி அவ்வாறு வந்தால் சிறையில் அடைக்கப்படுவார்கள் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது ஒரின சேர்க்கையை ஊக்குவிக்கும் வீரர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆடை கட்டுப்பாடு
இதே போன்று கால்பந்து போட்டியை பார்க்க வரும் பெண்கள், நாகரீக உடையை அணிய வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பிக்னி உடைகள் மற்றும் குட்டை பாவடை, கவர்ச்சி உடைகளை அணிந்து போட்டியை பார்க்க வரக் கூடாது என்றும், அவ்வாறு வந்தால் கடும் தண்டனை விதிக்கப்படும் என்று கூறியுள்ளது. தற்போது அனைத்துக்கும் மேலாக, மதுபானங்களை மைதானத்திற்கு கொண்டு வர கூடாது என்று கத்தார் அரசு தெரிவித்துள்ளது.

மதுபானங்களுக்கு தடை
மைதானத்தில் பார்க்க வரும் ரசிகர்களிடையே Budweiser என்ற மதுபானம் மட்டுமே விற்கப்படும். இதற்காக 1986 ஆம் ஆண்டு முதல் ஃபிஃபாவிடம் அந்நிறுவனம் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. தற்போது கத்தார் அரசு அதற்கும் தடை விதித்துள்ளதால், ரசிகர்களும், ஃபிஃபா நிர்வாகிகளும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனால் மதுபானங்கள் இல்லாமல் போட்டியை எப்படி பார்ப்பது என்று வெளிநாட்டு ரசிகர்கள் கலக்கத்தில் உள்ளனர். கத்தாரில் உணவகங்களில் மற்றும் சில பார்களில் மட்டும் லைசன்ஸ் வழங்கப்பட்டு, அங்கு மதுபானம் அருந்தலாம். வேறு எங்கேயாவது அருந்தினால், கைது செய்யப்படுவார்கள்.


Click it and Unblock the Notifications