For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஃபிபா உலகக்கோப்பை சர்ச்சை.. கத்தாருக்கு வாய்ப்பு வழங்கியதே தவறுதான்.. ஒப்புக்கொண்ட செப் பிளாட்டர்!

தோஹா: கால்பந்து உலகக்கோப்பை நடத்த கத்தார் நாட்டை தேர்வு செய்வதாக எடுக்கப்பட்ட முடிவு தவறானது என்று ஃபிபா முன்னாள் தலைவர் செப் பிளாட்டர் தெரிவித்துள்ளார்.

கத்தாரில் நடைபெறும் உலகக்கோப்பைத் தொடரை நேரில் பார்க்க உள்ள ரசிகர்களுக்கு போடப்பட்டுள்ள கட்டுப்பாடுகளே சர்ச்சையை எழுப்பியுள்ள நிலையில், கத்தார் நாட்டிற்கு உலகக்கோப்பை தொடர் நடத்த வாய்ப்பு கிடைத்தது மேலும் ஒரு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கத்தாரில் உலகக்கோப்பைத் தொடரை நடத்துவதற்கு ஏற்பட்டுள்ள செலவை கேட்டால், தலையே சுற்றிவிடும். சுமார் 220 பில்லியன் டாலர்கள் செலவிடப்பட்டு உலகக்கோப்பைத் தொடரை கத்தார் நடத்துகிறது.

 எவ்வளவு செலவு?

எவ்வளவு செலவு?

முன்னதாக ரஷ்யா நடத்திய உலகக்கோப்பைத் தொடருக்காக 11.6 பில்லியன் டாலர்களும், பிரேசிலில் நடைபெற்ற உலகக்கோப்பைத் தொடருக்காக 15 பில்லியன் டாலரும், தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற உலகக்கோப்பைத் தொடருக்காக 3.6 பில்லியன் டாலருமே செலவிடப்பட்டுள்ளது. இப்படி ஜெர்மனி, ஜப்பான், பிரான்ஸ், அமெரிக்கா என எந்த நாடாக இருந்தாலும், கத்தார் அளவிற்கு செலவு செய்து , எந்த நாடும் உலகக்கோப்பைத் தொடரை நடத்தியதில்லை.

எப்படி தேர்வு?

எப்படி தேர்வு?

கடந்த 2010ம் ஆண்டு ஃபிபா சார்பாக 2018 மற்றும் 2022ம் ஆண்டு உலகக்கோப்பை தொடரை நடத்துவதற்கு விருப்பம் உள்ள நாடுகள் விண்ணப்பிக்கலாம் என அறிவித்தது. இந்த வாய்ப்புக்காக ஒவ்வொரு நாடும் உலகக்கோப்பை நடத்துவதற்கு வைத்துள்ள திட்டம், எவ்வளவு தொகை அவர்களால் செலவு செய்ய முடியும் உள்ளிட்டவற்றை ஃபிபா அமைப்பிடம் தெரிவிக்க வேண்டும். பின்னர் ஃபிபா நிர்வாகிகள் வாக்களித்து எந்த நாடு அதிக வாக்குகள் பெறுகிறதோ அவர்களுக்கு வழங்கப்படும்.

கத்தார் மீது குற்றச்சாட்டுகள்

கத்தார் மீது குற்றச்சாட்டுகள்

அப்போது 2022ம் ஆண்டு உலகக்கோப்பையை நடத்தும் வாய்ப்பு கத்தார் நாட்டிற்கு வழங்கப்பட்டது. மனித உரிமைகள் மீறல்கள், LGBT சமூகத்திற்கு தடை, ஆடைக் கட்டுப்பாடு உள்ளிட்டவற்றை கேள்வி எழுப்பியதோடு, கால்பந்து மைதானங்களே இல்லாத கத்தார் நாட்டிற்கு எப்படி உலகக்கோப்பை நடத்தும் வாய்ப்பு கிடைத்தது என்ற குற்றச்சாட்டுகள் எழுந்தன.

செப் பிளாட்டர்

செப் பிளாட்டர்

இதுமட்டுமல்லாமல் ஃபிபா அமைப்பின் அசைக்க முடியாத தலைவராக இருந்த செப் பிளாட்டர், பதவியை ராஜினாமா செய்தார். இருந்தும் கத்தார் உலகக்கோப்பை சர்ச்சைகள் ஓயவில்லை. இன்றுவரை தொடர்ந்துகொண்டே இருக்கிறது. இந்த நிலையில் கத்தாருக்கு உலகக்கோப்பை வழங்கியதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டது தவறானது என்று செப் பிளாட்டர் தெரிவித்துள்ளார்.

தவறான முடிவு

தவறான முடிவு

இதுகுறித்து செப் பிளாட்டர் கூறுகையில், கத்தாருக்கு உலகக்கோப்பை நடத்தும் வாய்ப்பு வழங்கப்பட்டது மோசமான முடிவு. கத்தார் நாட்டின் வெப்பநிலைக்காக அட்டவணை மாற்றம், முக்கிய லீக் போட்டிகள் நடக்கும் சூழல் உலகக்கோப்பையை நடத்துவது என்ற தவறான முடிவு எடுத்துவிட்டோம் என்று தெரிவித்துள்ளார்.

Story first published: Saturday, November 19, 2022, 12:02 [IST]
Other articles published on Nov 19, 2022
English summary
Qatar is a mistake; A bad choice says Sepp Blatter, the former president of world soccer's governing body FIFA
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+