Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

32 அணிகள் 8 ஆனது... காலிறுதி சுற்றுக்கு முன்னேறின... யார் யாருடன் விளையாடுகின்றனர்!

மாஸ்கோ: 21வது ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் நாக் அவுட் சுற்று ஆட்டங்கள் முடிந்து, 8 அணிகள் காலிறுதிக்கு முன்னேறியுள்ளன. காலிறுதி ஆட்டங்கள் 6, 7ம் தேதிகளில் நடக்கின்றன.

21-வது ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷ்யாவில் நடந்து வருகின்றன. இதில் 32 நாடுகள் பங்கேற்றன. இவை தலா 4 நாடுகள் என, 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டன. ஜூன் 14ல் துவங்கிய பிரிவு சுற்று லீக் ஆட்டங்கள் 28ம் தேதியோடு முடிந்தன.

quarter finals of the fifa world cup to start on 6th

ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடித்த அணிகள், நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறின. நாக் அவுட் சுற்று ஆட்டங்கள் ஜூன் 30ல் துவங்கி, ஜூலை 3ம் தேதி வரை நடந்தன.

இதில் வெற்றி பெற்று பிரான்ஸ், உருகுவே, பிரேசில், பெல்ஜியம், ரஷ்யா, குரேஷியா, ஸ்வீடன், இங்கிலாந்து ஆகிய 8 அணிகள் காலிறுதிக்கு நுழைந்துள்ளன.

முன்னாள் சாம்பியன் இத்தாலி இந்த உலகக் கோப்பைக்கு தகுதி பெறவில்லை. நடப்பு சாம்பியன் ஜெர்மனி முதல் சுற்றுடன் வெளியேறியது. கோப்பையை வெல்லக் கூடியதாக கருதப்பட்ட முன்னாள் சாம்பியன்களான ஸ்பெயின், அர்ஜென்டினா மற்றும் போர்ச்சுகல் ஆகியவை நாக் அவுட்டில் வெளியேறின.

முன்னாள் சாம்பியன்களான பிரான்ஸ், உருகுவே, பிரேசில், இங்கிலாந்து ஆகியவை காலிறுதிக்கு முன்னேறியுள்ளன.

காலி இறுதி சுற்று ஆட்டங்களுக்கான முழு அட்டவணை:

ஆட்டம் எண் 57. ஜூலை 6 - இரவு 7.30 - நிஷ்னி நோவ்கோராட் : உருகுவே - பிரான்ஸ்
ஆட்டம் எண் 58. ஜூலை 6 - இரவு 11.30 - கசான் : பிரேசில் - பெல்ஜியம்
ஆட்டம் எண் 59. ஜூலை 7 - இரவு 11.30 - சோச்சி : ரஷ்யா - குரேஷியா
ஆட்டம் எண் 60 ஜூலை 7 - இரவு 7.30 - சமாரா : ஸ்வீடன் - இங்கிலாந்து

Story first published: Wednesday, July 4, 2018, 2:36 [IST]
Other articles published on Jul 4, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+