For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
இந்தியன் சூப்பர் லீக் கணிப்புகள்
VS

“எனக்கு நடந்தது யாருக்கும் நடக்க கூடாது” பிரபல கால்பந்து வீரர் மீது பாலியல், கடத்தல் புகார்

பியூ ஐரீஸ்; கால்பந்து உலகின் முன்னணி வீரராக திகழ்ந்தவர் அர்ஜென்டினாவின் தங்கம் டீகோ மரடோனா.

1986ஆம் ஆண்டு அர்ஜென்டினா அணிக்கு தலைமை தாங்கி உலகக் கோப்பையை வென்று தந்தவர். 1990 உலகக் கோப்பை இறதிப் போட்டி வரை அணியை அழைத்து சென்றவர் என பல்வேறு சாதனைகளை படைத்தவர்

எத்தனை சாதனைகளை படைத்துள்ளாரோ, அதே போல் பல சர்ச்சைகளிலும் சிக்கியுள்ளார். போதை மருந்து பயன்படுத்தி, பல்வேறு வழக்குகளிலும் சிக்கியவர் மரடோனா

“ஓப்பனிங் சிறப்பு.. ஃபினிஷிங் மோசம்”.. பெட்டி பாம்பாய் அடங்கிய நியூஸி,.. ஆட்டத்தை மாற்றிய 4 ஒவர்கள்!“ஓப்பனிங் சிறப்பு.. ஃபினிஷிங் மோசம்”.. பெட்டி பாம்பாய் அடங்கிய நியூஸி,.. ஆட்டத்தை மாற்றிய 4 ஒவர்கள்!

உயிரிழப்பு

உயிரிழப்பு

கால்பந்து உலகையே கட்டி ஆண்ட மரடோனா, கடந்த ஆண்டு தலையில் ரத்தம் கட்டி இருந்ததால் அறுவை சிகிச்சை மேற்கொண்டார். இதில் சிகிச்சை பலனின்றி கடந்த ஆண்டு நவம்பர் 25ஆம் தேதி காலமானார். இந்த நிலையில், அவரது முதலாம் ஆண்டு அஞ்சலியை அனுசரிக்க பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அப்போது தான் மீண்டும் ஒரு பூகம்பம் வெடித்துள்ளது.

பூகம்பம்

பூகம்பம்

கியூபாவை சேர்ந்த அல்வாரெஸ் என்ற பெண். மரடோனா தன்னை கடத்தி வைத்து, பாலியல் பலாத்காரம் செய்துவிட்டதாக பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்றை அளித்துள்ளார். தமக்கு போதை மருந்துகளை வழங்கி, ஒரு இடத்தில் அடைத்து வைத்து தினமும் பலாத்காரம் செய்ததாகவும், அதற்கான ஆதாரங்கள் தம்மிடம் இருப்பதாகவும் அந்தப் பெண் தெரிவித்தார்.

சைகோ

சைகோ

கடந்த 2001ஆம் ஆண்டு தாம் 16 வயது பெண்ணாக இருந்த போது விமான பயணம் ஒன்றில் மரடோனாவை சந்தித்து தனது மனதை பறிக்கொடுத்ததாக அல்வாரெஸ் கூறியுள்ளார். முதலில் 2 மாதம் அவருடன் நன்றாக இருந்தேன். ஆனால், பிறகு அவர் நடத்தையில் மாற்றம் தெரிந்து. ஒரு சைகோ போல் மரடோனா நடந்து கொண்டார். என் விருப்பத்தையும் மீறி என்னை அடைத்துவைத்து காலை, மாலை என எப்போதும் என்னை தொடர்ந்து பலாத்காரம் செய்து வந்தார். என் அனுமதியையும் மீறி எனக்கு மார்பக மாற்று அறுவை சிகிச்சையை மரடோனா செய்து வைத்தார் என அந்தப் பெண் பரபரப்பு குற்றஞ்சாட்டினார்

புகார்

புகார்

மரடோனா உயிருடன் இருக்கும் வரை இந்த புகாரை ஏன் தெரிவிக்கவில்லை என்ற கேள்விக்கு பதில் அளித்த அந்த பெண், எனக்கு நடந்த கொடுமை, வேறு யாருக்கும் நடக்க கூடாது என்பதால் தான் இதனை கூறகிறேன். மரடோனாவை நான் காதலிக்கிறேன், அதே நேரம் அவரை நான் வெறுக்கிறேன் என அந்த பெண் பதில் அளித்துள்ளார். இதனிடையே, இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள மரடோனா குடும்பம், அல்வாரெஸ் மீது அவதூறு வழக்கு தொடர உள்ளதாக தெரிவித்துள்ளது.

Story first published: Tuesday, November 23, 2021, 17:53 [IST]
Other articles published on Nov 23, 2021
English summary
Rape and Abducted complaints on Late Football Legend Marodona. In his First anniversary serious complaints on Mardona linking Sexual abuse. Human trafficking
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X