For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
இந்தியன் சூப்பர் லீக் கணிப்புகள்
VS

UEFA சாம்பியன்ஸ் லீக் கால்பந்து - 14வது முறையாக கோப்பையை வென்ற ரியல் மாட்ரிட் .. லிவர்புல் அணி சோகம்

பாரிஸ் : கால்பந்து உலகின் மிக உயரிய தொடர்களில் ஒன்றான சாம்பியன்ஸ் லீக் தொடரின் இறுதிப் போட்டி பாரிஸ் நகரில் இன்று அதிகாலை நடைபெற்றது.

இந்தப் போட்டியில் ரியல் மாட்ரிட் அணியும், லிவர்புல் அணியும் பலப்பரீட்சை நடத்தின.

இந்தப் போட்டியை ரபேல் நடால் உள்ளிட்ட பிரபலங்கள் மைதானத்தில் கண்டு களித்தனர். இந்திய ரசிகர்களும் பெரும் ஆவலுடன் கண் விழித்து இந்தப் போட்டியை கண்டனர்.

கிறிஸ்டியானோ ரொனால்டோ மகன் உயிரிழப்பு.. கால்பந்து உலகமே சோகம்.. இணையத்தில் உருக்கமான பதிவு!கிறிஸ்டியானோ ரொனால்டோ மகன் உயிரிழப்பு.. கால்பந்து உலகமே சோகம்.. இணையத்தில் உருக்கமான பதிவு!

பாதுகாப்பு அரண்

பாதுகாப்பு அரண்

பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் லிவர்புல் வீரர்கள் அதிரடியாக ஆடி கோல்களை அடிக்க முயன்றனர். ஆனால் ரியன் மாட்ரிட் கோல் கீப்பர் கோர்டோயிஸை மீறி ஏதும் செய்ய முடியவில்லை. ஆட்டத்தின் 21வது நிமிடத்தில் லிவர்புல் வீரர் சாடியோ மான் அடித்த கோல் வாய்ப்பை அபாரமாக கோல் கீப்பர் கோர்டோயிஸ் தடுத்தார்.

முதல் கோல்

முதல் கோல்

இதே போன்று 30வது நிமிடம் மற்றும் 36வது நிமிடங்களில் ரியல் மாட்ரிட்க்கு கிடைத்த கோல் வாய்ப்பும் வீணானது. முதல் பாதி இறுதியில் ரியல் மாட்ரிட் அடித்த கோல், VAR தொழில்நுட்ப படி ஆய்வு செய்யப்பட்டு அது கோல் இல்லை என்று அறிவிக்கப்பட்டது. எனினும் ஆட்டத்தின் 59வது நிமிடத்தில் ரியல் மாட்ரிட் வீரர் வினிசியஸ் ஜூனியர் கோல் அடிக்க, ரியல் மாட்ரிட் அணி முன்னிலை பெற்றது.

விறுவிறுப்பான ஆட்டம்

விறுவிறுப்பான ஆட்டம்

இதனை சமன் செய்ய, லிவர்புல் நட்சத்திர வீரர் முகமது சாலா ஆட்டத்தின் 64வது நிமிடத்தில் அடித்த போல் வாய்ப்பை மீண்டும் கோர்ட்டோயிஸ் தடுத்து அசத்தினார். இதே போன்று 82வது நிமிடத்திலும் சாலா அடித்த பந்து கோலாக முடியும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதனையும் கோர்ட்டோயிஸ் தடுத்து அசத்தினார். இப்படி ஆட்டம் முழுவதும் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் இருந்தது.

14வது முறையாக சாம்பியன்

14வது முறையாக சாம்பியன்

மொத்தமாக ஆட்டத்தில் 20 முறை லிவர்புல் வீரர்கள் கோல் அடிக்க முயற்சித்தனர். இதில் 9 முறை கோல் போஸ்ட்க்கு நேராக சென்ற பந்தை ரியல் மாட்ரிட் கீப்பர் கோர்டோயிஸ் தடுத்து சிம்ம சொப்பனமாக விளங்கினார். இதன் மூலம் 1க்கு 0 என்ற கணக்கில் வெற்றி பெற்ற ரியல் மாட்ரிட் அணி 14வது முறையாக சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியை வென்று அசத்தியது. இங்கிலிஷ் பிரிமியர் லீக் சாம்பியன் பட்டத்தை நூழிலையில் தவறவிட்ட லிவர்புல், சாம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டியிலும் தோற்றது.

Story first published: Sunday, May 29, 2022, 20:00 [IST]
Other articles published on May 29, 2022
English summary
Real Madrid beat Liverpool to become 14 time UEFA champion UEFA சாம்பியன்ஸ் லீக் கால்பந்து - 14வது முறையாக கோப்பையை வென்ற ரியல் மாட்ரிட் .. லிவர்புல் அணி சோகம்
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X