For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

16 வயது வீரருக்கு ரூ.620 கோடி ஒப்பந்தம்.. நெய்மருக்கு பின் இவர்தான்.. அடித்து சொல்லிய ரியல் மாட்ரிட்

ஸ்பெயின்: பிரேசில் நாட்டைச் சேர்ந்த 16 வயதாகும் என்ரிக் என்ற இளம் வீரரை ரூ.620 கோடிக்கு பிரபல அணியான ரியல் மாட்ரிக் ஒப்பந்தம் செய்துள்ளது பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்துள்ளது.

ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த பிரபல கால்பந்து கிளப்-களில் ஒன்று ரியல் மாட்ரிட். மாட்ரி நகரை மையமாக வைத்து செயல்படும் ரியல் மாட்ரிட் கிளப், 1902ம் ஆண்டு தொடங்கப்பட்டது.

கால்பந்து உலகின் அசைக்க முடியாத சக்தியாக விளங்கும் ரியல் மாட்ரிட் கிளப் அணிக்காக லூகா மோட்ரிச், பென்சிமா, ரோட்ரிகோ, வினிசியஸ் என ஏராளமான நட்சத்திர வீரர்கள் விளையாடி வருகின்றனர்.

ரியல் மாட்ரிக் ஒப்பந்தம்

ரியல் மாட்ரிக் ஒப்பந்தம்

இந்த நிலையில் ரியல் மாட்ரிட் அணி பிரேசில் நாட்டைச் சேர்ந்த 16 வயது வீரர் ஒருவரை ஒப்பந்தம் செய்துள்ளது பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்துள்ளது. பிரேசில் நாட்டைச் சேர்ந்த என்ரிக், பிரேசிலின் பால்மீராஸ் கிளப் அணிக்காக விளையாடி வருகிறார். இவரது திறமையை கண்டறிந்த ரியல் மாட்ரிட் அணி, என்ரிக்கிற்கு 74.88 மில்லியன் டாலர் கொடுத்து ஒப்பந்தம் செய்துள்ளது.

ரூ.620 கோடிக்கு ஒப்பந்தம்

ரூ.620 கோடிக்கு ஒப்பந்தம்

இந்திய மதிப்பில் சுமார் ரூ.620 கோடி என்பதாகும். பிஎஸ்ஜி, லிவர்பூல், பார்சிலோனா, மான்செஸ்டர் சிட்டி, மான்செஸ்டர் யுனைடெட் என ஏராளமான அணிகளும் என்ரிக்கை ஒப்பந்தம் செய்ய முயற்சித்த நிலையில், மிகப்பெரிய தொகையை கொடுத்து ரியல் மாட்ரிட் அணி ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நட்சத்திர வீரர் நெய்மருக்கு பின், பிரேசில் சாம்பியன்ஷிப் தொடரில் விளையாடிய வீரர் ஒருவருக்கு இவ்வளவு பெரிய தொகை கொடுக்கப்பட்டுள்ளது.

என்ரிக்கின் கனவு

என்ரிக்கின் கனவு

இதுகுறித்து பால்மீராஸ் வீரர் என்ரிக் கூறுகையில், பால்மீராஸ் அணிக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன். நான் இன்று இந்த இடத்திற்கு வர பால்மீராஸ் அணியே அனைத்து உதவிகளையும் செய்தது. எனது ஏராளமான கனவுகளை எட்டிப்பிடிக்க பால்மீராஸ் அணியே காரணமாக இருந்தது. இப்போது எனது அடுத்த கனவும் செயல்வடிவம் பெற உதவியாய் இருக்கிறது.

176 கோல்கள்

176 கோல்கள்

ரியல் மாட்ரிக் அணியில் இணையும் வரை பால்மீராஸ் அணியில் தொடர்ந்து விளையாடுவேன். அதிக கோல்கல், அதிக வெற்றிகள், அதிக சாம்பியன்ஷிப்கள் வென்று ரசிகர்களுக்கு கொண்டாட்டத்திற்கு காரணமாக இருக்க வேண்டும் என்பதே என் ஆசை என்று தெரிவித்துள்ளார். இதனிடையே ரியல் மாட்ரிட் கிளப் அணி தரப்பில் கூறுகையில், என்ரிக் அடுத்த வாரம் ஸ்பெயின் வந்து கால்பந்து கட்டமைப்புகளை பார்வையிட உள்ளார். பால்மீராஸ் அகாடமிக்காக இதுவரை என்ரிக் 176 போட்டிகளில் விளையாடி 170 கோல்களை அடித்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டிஉள்ளது.

2024 லா லிகா தொடர்

2024 லா லிகா தொடர்

இதற்கு முன் பிரேசில் நாட்டைச் சேர்ந்த வீரர்களான வினிசியஸ் ஜூனியர், ரோட்ரிகோ ஆகியோர் ரியல் மாட்ரிட் அணிக்காக 18 வயதை எட்டுவதற்கு முன் ஒப்பந்தம் செய்யப்பட்டனர். அதேபோல் என்ரிக் 16 வயதிலேயே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இவர் 2024ம் ஆண்டு லா லிகா தொடரில் களமிறக்கப்படுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Story first published: Friday, December 16, 2022, 13:54 [IST]
Other articles published on Dec 16, 2022
English summary
Endrick, a 16-year-old young player from Brazil, has been surprised by the famous team Real Madrid's contract of Rs.620 crores.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+