Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இனிதான் கெத்தே.. பயிற்சியாளராக ரிட்டர்ன் ஆன ஜிடேன்.. ரியல் மேட்ரிட்டுக்கு தொடங்கும் சுக்கிர திசை

ரியல் மாட்ரிட்:கால்பந்து உலகின் முக்கிய அணியான ரியல் மேட்ரிட் அணிக்கு பயிற்சியாளராக மீண்டும் ஜினடின் ஜிடேன் நியமிக்கப்பட்டுள்ளார்.

உலகின் முன்னணி கால்பந்து அணியான ரியல் மேட்ரிட்டுக்கு தற்போது ராகுகாலம் போல. லா லிகா, கோபா டெல் ரே, சாம்பியன்ஸ் லீக் என கிட்டத்தட்ட 10 நாட்களில் முக்கியமான அனைத்துக் கோப்பைகளையும் அந்த அணி கை நழுவ விட்டுள்ளது.

மிகவும் பிரபலம் வாய்ந்த ரியல் மேட்ரிட் கால்பந்து அணி தற்போது மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. அதனால் ரசிகர்கள் உச்சக்கட்ட வெறுப்பில் உள்ளனர்.

துரத்திய தோல்விகள்

துரத்திய தோல்விகள்

நடப்பு ஐரோப்பிய சாம்பியன் ரியல் மாட்ரிட், 12 முறை சாம்பியன்ஸ் லீக் வென்ற ரியல் மாட்ரிட் என்ற பெருமையுடைய அந்த அணி சொந்த மைதானமான சேன்டியாகோ போர்னபோவில் தோல்வியை சந்தித்து இருக்கிறது. அதுவும்.. தொடர்ந்து நான்காவது முறையாக... இன்னும் சொல்ல போனால் காலிறுதிக்கே தகுதி பெறாமல் நடையை கட்டி இருக்கிறது.

ஜிடேன் விலகல்

ஜிடேன் விலகல்

2018ம் ஆண்டு உலக கோப்பை கால்பந்து தொடர் முடிந்தவுடன் அணியில் இருந்து நட்சத்திர கால்பந்து வீரர் ரொனால்டோ யுவன்டஸ் அணிக்கு விளையாட ஒப்பந்தம் ஆனார். அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்து ஜினடின் ஜிடேன் விலகினார்.

சாதனை வெற்றிகள்

சாதனை வெற்றிகள்

2016 முதல் 2018 வரை இவரது பயிற்சியின் கீழ்தான், ரியல் மேட்ரிட் தொடர்ச்சியாக 3 முறை சாம்பியன்ஸ் லீக் கால்பந்து கோப்பையை வென்று சாதனை படைத்தது. அவருக்கு பதிலாக, ஜூலென் ரியல் மேட்ரிட் அணியின் பயிற்சியாளரானார்.

மோசமான ஆட்டம்

மோசமான ஆட்டம்

ஆனால், இவரது தலைமையின்கீழ் ரியல் மேட்ரிட் அணி மோசமான ஆட்டத்தை வெளிபடுத்தியது. குறிப்பாக, பார்சிலோனா அணிக்கு எதிரான குரூப் ஆட்டத்தில் 5-1 என மோசமான தோல்வியை பதிவு செய்தது. இதன் விளைவாக அவரை பயிற்சியாளர் பதவியில் இருந்து வீட்டுக்கு அனுப்பியது.

நிலைமை மாறவில்லை

நிலைமை மாறவில்லை

சன்டியாகோ சொலாரியை புதிய பயிற்சியாளராக நியமித்தது. பயிற்சியாளரை மாற்றினாலும், அவர்களால் தலைவிதி மாறவில்லை. சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் நாக் சுற்றிலிருந்து வெளியேறியது. மீண்டும் பயிற்சியாளர் பதவிக்கு வேட்டு வைக்கப்பட்டது. சன்டியாகோ சொலாரி வீட்டுக்கு அனுப்பப்பட்டார்.

மீண்டும் முடிவு

மீண்டும் முடிவு

என்ன ஆச்சு என்று அனைவரும் கட்டம் கட்டி யோசித்து.. மீண்டும் அணியின் பயிற்சியாளராக ஜினடின் ஜிடேனை கொண்டு வரலாம் என்று முடிவு செய்தனர். அதன்படி ஜின்டேன் மீண்டும் ரியல் மேட்ரிட் அணியின் பயிற்சியாளராக நியிமிக்கப்பட்டுள்ளார்.2022ஆம் ஆண்டு வரை ரியல் மேட்ரிட் அணியின் பயிற்சியாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

ரசிகர்கள் மகிழ்ச்சி

ரசிகர்கள் மகிழ்ச்சி

அதனால் ரியல் மேட்ரிட் அணியின் ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியில் உள்ளனர். அணி மீண்டும் வெற்றி பாதையில் திரும்புமா என்று தெரியவில்லை பார்ப்போம்.

Story first published: Tuesday, March 12, 2019, 11:58 [IST]
Other articles published on Mar 12, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+