ரொனால்டோ ஏன் கரச்சான் மண்டையோட திரியறாப்லன்னு தெரியுமா பாஸ் ?
மனாஸ், பிரேசில்: போர்ச்சுகல் கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ இந்த முறை சரியாக ஆடவில்லை. ஆனால் அவரது ஹேர்ஸ்டைல் செம பிக்கப் ஆகி விட்டது.
புதிய ஹேர் ஸ்டைலுடன் அவர் அமெரிக்காவுக்கு எதிரான போட்டியில் ஆடியபோது அவரது கால்களை விட தலையையே அத்தனை பேரும் அட அட என்று உச்சுக் கொட்டியடி பார்த்தனர்.
காரணம், அவரது தலையின் வித்தியாசமான ஹேர் ஸ்டைல்தான். நிறைய வேலைப்பாடுகளுடன் கூடிய தேக்குக் கதவு போல பளிச்சென ஷோக்காக இருக்கிறது ரொனால்டோவின் புதிய ஹேர் ஸ்டைல்.

பட்.. நல்லா இல்லையே
ஆனால் இந்த ஹேர் ஸ்டைல் அவரது ரசிகர்களுக்குப் பிடிக்கவில்லை. காரித் துப்பாத குறையாக டிவிட்டரிலும், பேஸ்புக்கிலும் விமர்சித்து வருகின்றனர்.

ஆனால் இது பேஷன் இல்லையாமே
ஆனால் பேஷனுக்காக இப்படி முடிவெட்டிக் கொள்ளவில்லையாம் ரொனால்டோ. அதற்குப் பின்னால் ஒரு கதை உள்ளது.

மூளை பாதிப்பு அடைந்த சிறுவனுக்காக
மூளை அறுவைச் சிகிச்சை செய்து கொண்ட ஒரு சிறுவனுக்காகவே இப்படி ஹேர்ஸ்டைலை மாற்றியுள்ளாராம் ரொனால்டோ.

ஸ்பெயின் சிறுவன்
ஸ்பெயினைச் சேர்ந்த எரிக் ஓர்டிஸ் கிரஸ் என்ற சிறுவனுக்கு மூளையில் அறுவைச் சிகிச்சை நடந்த்து. இந்த சிறுவனின் சிகிச்சைக்கான மொத்த செலவையும் ரொனால்டோவே ஏற்றுக் கொடுத்துள்ளார். தற்போது அந்த சிறுவனுக்காகவே தனது முடியவை இப்படி ஒட்ட வெட்டியுள்ளாராம் ரொனால்டோ.
நல்ல விஷயம் என்றால் பாராட்ட வேண்டியதுதான்.


Click it and Unblock the Notifications