For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அடேங்கப்பா.. என்னா உதை.. ரியோ ஒலிம்பிக்கில் புதிய வரலாறு படைத்த கனடாவின் பெக்கி!

ரியோ டி ஜெனீரோ: ரியோ ஒலிம்பிக் போட்டிகள் நாளை ஆரம்பிக்கவுள்ள நிலையில் கால்பந்துப் போட்டிகள் ஏற்கனவே தொடங்கி விட்டன. இதில் சில புதிய சாதனைகள் படைக்கப்பட்டுள்ளன. ஒலிம்பிக் போட்டிகளில் அதி வேகமாக கோலடித்த வீராங்கனை என்ற சாதனையை கனடாவின் ஜனைன் பெக்கி படைத்துள்ளார்.

ரியோ ஒலிம்பிக் போட்டியின் மகளிர் பிரிவில் ஆறு போட்டிகள் நடைபெற்று முடிந்துள்ளன. இதில் கனடா வீராங்கனை பெக்கி போட்டி ஆரம்பித்த 20 விநாடிகளில் கோலடித்து, ஒலிம்பிக் வரலாற்றிலேயே அதி வேகமாக கோலடித்த வீராங்கனை என்ற சாதனையைப் படைத்துள்ளார்.

Rio Olympics 2016 begins with women's football, new record set

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் இந்த சாதனையை அவர் படைத்தார். கனடா இப்போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

இன்னொரு போட்டியில் ஜெர்மனி அணி ஜிம்பாப்வே அணியை 6-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. பிரான்ஸ் அணி 4 கோல்கள் அடித்து கொலம்பியாவை புலம்ப வைத்தது.

அமெரிக்காவுக்கும், நியூசிலாந்துக்கும் இடையிலான போட்டியில் அமெரிக்க வீராங்கனைகள் 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றனர்.

ஸ்வீடனுக்கும், தென் ஆப்பிரிககாவும் இடையிலான போட்டியில் நில்லா பிஷரின் அபாரமான கோல் காரணமாக ஸ்வீடன் வெற்றி பெற்றது.

பிரேசில் - சீனா இடையிலான போட்டியில் பிரேசில் அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

Story first published: Thursday, August 4, 2016, 16:00 [IST]
Other articles published on Aug 4, 2016
English summary
Rio Olympics 2016 has begun with women's football and a new record has been set.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+