For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
இந்தியன் சூப்பர் லீக் கணிப்புகள்
VS

ரியோ ஒலிம்பிக்.. "புது மாப்பிள்ளை" பீலே கம்போஸ் செய்து பாடிய பாட்டு!

சாவோ பாலோ: ரியோ ஒலிம்பிக் போட்டிக்காக கால்பந்து ஜாம்பவான் பீலே தானே இசையமைத்து ஒரு பாடலைப் பாடி வெளியிட்டுள்ளார்.

Rio Olympics: Pele composes, records song 'Esperanca'

எஸ்பெரன்கா அதாவது நம்பி்க்கை என்ற தலைப்பிலான அந்தப் பாடல் ஒலிம்பிக் போட்டிக்காக பீலே தயார் செய்த பிரத்யேகப் பாடலாகும்.

இந்தப் பாடல் குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார் பீலே. இந்தப் பாடல் குறித்து பீலே கூறுகையில்,இதை நானே எழுதினேன். பதிவும் செய்துள்ளேன். ஜூலை 15ம் தேதி இப்பாடல் வெளியாகும் என்று கூறியுள்ளார் பீலே.

நான்கு நாட்களுக்கு முன்புதான் மார்சியா சிபெல்லி அயோக்கி என்ற பெண்மணியை 3வது திருமணம் செய்தார் பீலே. சூட்டோடு சூடாக ஒலிம்பிக்குக்கு ஒரு பாட்டையும் போட்டு அசத்தியுள்ளார்.

பாட்டும், பீலேவும் இணை பிரியாதவர்கள். மறைந்த பிரேசில் பாப் சூப்பர்ஸ்டார் எலிஸ் ரெஜினாவுடன் இணைந்து பல பாடல்களைப் பதிவு செய்து வெளியிட்டுள்ளார் பீலே. மேலும் சம்பா இசை சாயலில் கிறிஸ்துமஸ் பாடல்களையும் அவர் இயற்றி பாடி வெளியிட்டுள்ளார். சிறார்களுக்காகவும் பல பாடல்களைப் பாடியுள்ளார் பீலே என்பது கூடுதல் செய்தி.

Story first published: Thursday, July 14, 2016, 10:49 [IST]
Other articles published on Jul 14, 2016
English summary
Brazilian legend Edson Arantes do Nascimento, better known as 'Pele', on Wednesday (July 13) posted on his Twitter account that he has composed and recorded the song 'Esperanca' (Hope) for the upcoming Olympics in Rio de Janeiro, slated from August 5 to 21.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X