Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பலோன் டி'ஆர் விருது சர்ச்சை.. மான்செஸ்டர் சிட்டி வீரர் ரோட்ரி விருது வென்றதை எதிர்த்த ரியல் மேட்ரிட்

பாரிஸ்: 2024 ஆம் ஆண்டின் சிறந்த கால்பந்து வீரருக்கான பலோன் டி'ஆர் விருது மான்செஸ்டர் சிட்டி கிளப் அணி மற்றும் ஸ்பெயின் அணியின் மிட் ஃபீல்டரான ரோட்ரிக்கு வழங்கப்பட்டது. இந்த நிலையில் ரியல் மேட்ரிட் அணியின்
வினிஷியஸ் ஜூனியருக்கு விருது வழங்கப்படாதது மிகப்பெரிய சர்ச்சையாக மாறி உள்ளது.

ரியல் மேட்ரிட் அணி இந்த விருது விழாவை புறக்கணித்தது. இந்த சம்பவம் கால்பந்து உலகின் தலைப்பு செய்தியாக மாறி உள்ளது. ரசிகர்கள் பலரும் ரோட்ரிக்கு விருது வழங்கியதை எதிர்த்து கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். பலோன் டி'ஆர் விருதை வென்ற ரோட்ரி நான்கு முறை பிரீமியர் லீக் பட்டம் வென்ற வீரர் ஆவார். மேலும், 2024 யூரோ கோப்பை வென்ற வீரராகவும் இருந்தார்.

ballon d or real madrid


அதன் காரணமாக அவர் 2024 ஆம் ஆண்டின் சிறந்த கால்பந்து வீரருக்கான பலோன் டி'ஆர் விருதை வென்றார். அதே சமயம் வினிஷியஸ் ஜூனியர் ரியல் மேட்ரிட் அணிக்காக 2024 ஆம் ஆண்டில் லா லிகா மற்றும் சாம்பியன்ஸ் லீக் ஆகிய இரண்டு தொடர்களையும் வென்று இருந்தார். அவர் அதிக கோல்கள் அடித்ததுடன், அதிக கோல் உதவிகளையும் செய்து இருந்தார்.

அதனால், வினிஷியஸ் ஜூனியருக்கு தான் இந்த ஆண்டுக்கான பலோன் டி'ஆர் விருது அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மிட் ஃபில்டர் ஆன ரோட்ரிக்கு விருது வழங்கப்பட்டது கால்பந்து ரசிகர்கள் மத்தியிலும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இது சரியான முடிவல்ல என பல ரசிகர்களும் சமூக வலைதளங்களில் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

Story first published: Tuesday, October 29, 2024, 10:10 [IST]
Other articles published on Oct 29, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+