Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

27, 49, 86.. கோல்னா இதுதான் கோல்.. யுவண்டசை சாம்பியன்ஸ் லீக் காலிறுதிக்கு அழைத்து சென்ற ரொனால்டோ

ரோம்:சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் அற்புதமான ஹாட்ரிக் கோலால், யுவண்டஸ் அணி காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.

ஐரோப்பிய கிளப் அணிகளுக்கு இடையேயான கால்பந்து தொடர் நடைபெற்று வருகிறது.அதில், இத்தாலியின் கிளப் அணியான யுவண்டஸ் அணியும், ஸ்பெயினைச் சேர்ந்த கிளப் அணியான அட்லெட்டிக்கோ மாட்ரிட் அணியும் மோதின.

போட்டியில், ஆரம்பம் முதலே அனல் பறந்தது. இரு அணி வீரர்களும் கோல் அடிக்க மின்னல் வேகத்தில் பறந்ததால் விறுவிறுப்பாக இருந்தது.

27வது நிமிடத்தில் கோல்

27வது நிமிடத்தில் கோல்

ஆட்டத்தின் 27வது நிமிடத்தில், யுவண்டஸ் அணியின் கிறிஸ்டியானோ ரொனால்டோ அசத்தலாக ஒரு கோல் அடித்தார். அந்த அற்புத கோலை எதிர்பார்க்காத அட்லெடிக்கோ மாட்ரிட் அணி அதிர்ச்சி அடைந்தது.

தூள் பறந்த ஆதிக்கம்

தூள் பறந்த ஆதிக்கம்

அதைத் தொடர்ந்து, இரண்டாவது பாதி ஆட்டம் தொடங்கியது. அதிலும் ரொனால்டோவின் ஆதிக்கம் தூள் பறந்தது.

கோல்கள் அடித்து அசத்தல்

கோல்கள் அடித்து அசத்தல்

ரொனால்டோ 49 வது நிமிடத்தில் ஒரு கோலும், 86 வது நிமிடத்தில் பெனால்டி முறையில் கோல் அடித்து அசத்தினார். இதன்மூலம் யுவண்டஸ் அணி 3க்கு 0 என்ற கணக்கில் அட்லெட்டிக்கோ அணியை வீழ்த்தி காலிறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.

கோல் மழை

கோல் மழை

ரொனால்டோ 8வது முறையாக சாம்பியன்ஸ் லீக் தொடரில் ஹாட்ரிக் கோல் அடித்துள்ளார். முன்னதாக ரியல் மேட்ரிட் அணியில் விளையாடி வந்த ரொனால்டோவை 117 மில்லியன் அமெரிக்க டாலர்கள் கொடுத்து யுவண்டஸ் அணி வாங்கியது. அவர், யுவண்டஸ் அணிக்காக இதுவரை 36 போட்டிகளில் 22 கோல்களை அடித்துள்ளார்.

Story first published: Wednesday, March 13, 2019, 11:17 [IST]
Other articles published on Mar 13, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+