மூன்றாவது முறையாக சிறந்த வீரரானார் ரொனால்டோ!
மொனாக்கோ: ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பின், 2016-17ன் சிறந்த வீரராக, போர்ச்சுகல் கேப்டன், கிறிஸ்டினோ ரொனால்டோ தேர்ந்தெடுக்கப்பட்டார். மூன்றாவது முறையாக இந்த விருதை அவர் பெறுகிறார்.
ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பு, ஒவ்வொரு ஆண்டும், ஆண்டின் சிறந்த வீரரை தேர்ந்தெடுத்து கவுரவித்து வருகிறது.

2016-17ம் ஆண்டில் சிறந்த வீரருக்கான விருதுகள், மொனாக்கோவில் நடந்த விழாவில் வழங்கப்பட்டது. இதில், போர்ச்சுகல் கேப்டனும், ரியல் மாட்ரிட் அணியின் நட்சத்திர வீரர் ரொனால்டோ , இந்த ஆண்டுக்கான சிறந்த வீரராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அவருடைய தலைமையிலான ரியல் மாட்ரிட் அணியை தொடர்ந்து இரண்டாவது முறையாக சாம்பியன்ஸ் லீக் கோப்பையை வென்றது.. இந்தத் தொடரில் மட்டும், அவர் 12 கோல் அடித்தார்.
இந்த வருடத்திற்கான சிறந்த வீரர் விருது பட்டியலில் அர்ஜென்டினா மற்றும் பார்சிலோனா அணியின் நட்சத்திர ஆட்டக்காரருமான மெஸ்சியும் இருந்தார்.
ஆனால், சிறந்த வீரருக்கான ஓட்டெடுப்பில், அவர் மூன்றாவது இடத்தையே பிடித்தார். ஜூவன்டஸ் அணியின் கேப்டனும், கோல் கீப்பருமான ஜியான்லூகி பபான், இரண்டாவது இடத்தைப் பிடித்தார். சிறந்த வீரருக்கான விருதை, மெஸ்ஸி இரண்டு முறை வென்றுள்ளார்.
பெண்கள் பிரிவில், ஆண்டின் சிறந்த வீராங்கனைக்கான விருதை, நெதர்லாந்து அணியின் மார்டேன்ஸ் வென்றார். இவர் ஐரோப்பிய சாம்பியன் தொடரை நெதர்லாந்து வெல்ல முக்கிய காரணமாக இருந்தவர். அந்த தொடரின் சிறந்த வீராங்கனையாகவும் தேர்வு செய்யபட்டார் .
Story first published: Friday, August 25, 2017, 22:11 [IST]
Other articles published on Aug 25, 2017


Click it and Unblock the Notifications