800-வது கோல் அடித்த கால்பந்தின் “அண்ணாத்த” ரொனால்டோ..!!

மான்செஸ்டர்; கால்பந்து உலகில் யாரு கெத்து என்று அடிக்கடி மெஸ்ஸி, ரெனால்டோ ரசிகர்களிடையே மோதல் வரும்.

தற்போது மெஸ்ஸி 7வது முறையாக தங்க காப்ல்பந்து கோப்பையை வென்று, ரொனால்டோவை (5) பின்னுக்கு தள்ளினார்.

மேலும், மெஸ்ஸியை விட அதிக கோல் மற்றும் விருது வென்றால் தான் கால்பந்து போட்டியிலிருந்து விலகுவேன் என்று ரொனால்டோ கூறியதாக சர்ச்சை வேறு கிளம்பியது.

களத்திற்கு வெளியே எப்போது எல்லாம் சர்ச்சைகளும், தங்களை பற்றி விமர்சனங்கள் வந்தாலும், உண்மையான ஹீரோ களத்திற்கு உள்ளே தனது ஆட்டத்தின் மூலம் பதில் சொல்வான். அந்த பதிலை சொல்லி சொல்லி அடித்துள்ளார் ரொனால்டோ. இங்கிலீஷ் பிரிமீயர் லீக் ஆட்டத்தில் மான்செஸ்டர் யுனைடட் அணியும், ஆர்செனல் அணியும் மோதின.

இந்த ஆட்டத்தின் 52வது நிமிடத்தில் ரொனால்டோ கோல் அடிக்க, 800வது கோல் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்றார்.. அத்துடன் நிற்காமல் 70வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை கோலாக மாற்றி 801வது கோல் அடித்தார். இதன் மூலம் ஃபிஃபா அங்கீகரித்த கால்பந்து தொடரில் 801 கோல் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை ரொனால்டோ படைத்தார்

இஷானுக்கு பதிலாக ஏன் சூர்யகுமார்? 3 மிக முக்கிய காரணங்கள்.. கடைசி நேரத்தில் எடுக்கப்பட்ட முடிவு! இஷானுக்கு பதிலாக ஏன் சூர்யகுமார்? 3 மிக முக்கிய காரணங்கள்.. கடைசி நேரத்தில் எடுக்கப்பட்ட முடிவு!

ரொனால்டோவின் அதிரடியால் மான்செஸ்டர் யுனைடட் அணி 3க்கு2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. 37வயதான ரொனால்டோ முதலிடத்தில் இருக்க, மெஸ்ஸி 2வது இடத்தில் உள்ளார். ரொனால்டோ இன்னும் 2 ஆண்டுகள் விளையாடினால் ஆயிரம் கோல் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்துவிடுவார் என்று அவரது ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
இந்தியன் சூப்பர் லீக் கணிப்புகள்
VS
English summary
Ronaldo scored 801 Goals in competitive football. Ronaldo scored Twice as Manchester united beat Arsenal 2-1
Story first published: Friday, December 3, 2021, 11:34 [IST]
Other articles published on Dec 3, 2021
+ மேலும்
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X