Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐஎஸ்எல்லின் கோல் ஸ்கோரிங் மெஷின்... ராய் கிருஷ்ணாவின் சிறப்பான ஆட்டம்

வாஸ்கோ : ஐஎஸ்எல்லின் கோல் ஸ்கோரிங் மெஷினாக ஏடிகே மோஹுன் பகனின் வீரர் ராய் கிருஷ்ணா உள்ளார்.

இந்த தொடரில் இதுவரை 6 போட்டிகளில் விளையாடி 5 கோல்களை அடித்துள்ளார் ராய் கிருஷ்ணா.

தொடர்ந்து ஐஎஸ்எல்லில் சிறப்பாக விளையாடிவரும் ராய் கிருஷ்ணா மோஹுன் பகனின் சிறப்பான வீரராக இருப்பதில் எந்த வியப்பும் இல்லை.

5 கோல்களை அடித்த ராய் கிருஷ்ணா

5 கோல்களை அடித்த ராய் கிருஷ்ணா

எஸ்எல்லின் கோல் ஸ்கோரிங் மெஷினாக ஏடிகே மோஹுன் பகனின் வீரர் ராய் கிருஷ்ணா உள்ளார். கடந்த சீசனை விட அந்த அணி இந்த சீசனில் சிறப்பாக விளையாடி வருவதற்கு ராய் கிருஷ்ணாவும் முக்கிய காரணமாக அமைந்துள்ளார். இந்த சீசனில் இதுவரை 6 போட்டிகளில் அந்த அணி விளையாடியுள்ள நிலையில் அவர் 5 கோல்களை அடித்துள்ளார்.

15 கோல்கள்

15 கோல்கள்

கடந்த சீசனில் 15 கோல்களை அடித்து அந்த அணியின் வெற்றித் தருணங்களுக்கு காரணமாக அமைந்த ராய் கிருஷ்ணா இந்த தொடரின் கேரளா பிளாஸ்டர்ஸ் அணிக்கு எதிரான முதல் போட்டியிலிருந்தே தன்னுடைய கோல் கணக்கை துவக்கி துவக்கி அதை தொடர்ந்தும் வருகிறார்.

5 கோல்கள்

5 கோல்கள்

மோஹுன் பகன் இதுவரை இந்த சீசனில் விளையாடியுள்ள 6 போட்டிகளிலும் சிறப்பாக விளையாடியுள்ள ராய் கிருஷ்ணா, ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் மட்டும் கோல் அடிக்கவில்லை மற்ற 5 அணிகளுக்கெதிரான போட்டிகளிலும் தலா ஒரு கோலை அவர் பதிவு செய்துள்ளார்.

வெற்றி சதவிகிதம்

வெற்றி சதவிகிதம்

அவர் 5 கோல்களை மோஹுன் பகன் அணிக்காக அடித்துள்ள நிலையில் அதன் மதிப்பு 71.4 சதவிகிதமாக உள்ளது. இதை தொடர்ந்து கோவா எப்சி அணியின் இகோர் ஆங்குலோ மற்றும் நெரிஜுன் வால்ஸ்கிஸ் உள்ளிட்ட வீரர்கள் சிறப்பாக விளையாடி வருகின்றனர்.

பெங்களூரு அணியின் சவால்

பெங்களூரு அணியின் சவால்

இந்நிலையில் பெங்களூரு எப்சி அணியுடன் நாளை மோஹுன் பகன் அணி மோதவுள்ளது. கடந்த 3 போட்டிகளில் சிறப்பான போட்டிகளை வெளிப்படுத்தாத பெங்களூரு அணிக்கு ராய் கிருஷ்ணாவை எதிர்த்து விளையாடுவது மிகவும் கடுமையானதாகவே இருக்கும்.

Story first published: Sunday, December 20, 2020, 21:55 [IST]
Other articles published on Dec 20, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+