Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பரபரப்பான தருணம்.... அபாரமாக கோலை தடுத்தார்.... ரஷ்யாவின் ஹீரோவான இகோர் அகின்பீப்!

மாஸ்கோ: இந்த உலகக் கோப்பையில் தொடர்ந்து இரண்டு நாட்களில் அர்ஜென்டினா, போர்ச்சுகல், ஸ்பெயின் ஆகிய மூன்று முக்கிய அணிகள் வெளியேறியுள்ளன. இந்த நிலையில் யாருமே எதிர்பார்க்காத நிலையில் ரஷ்யா காலிறுதிக்கு முன்னேறியுள்ளது. அதற்கு முக்கிய காரணம் அந்த அணியின் கேப்டன் இகோர் அகின்பீப் அபாரமாக இரண்டு கோல்களை தடுத்து நிறுத்தியதுதான்.

21வது ஃபிபா உலகக் கோப்பை போட்டிகள் ரஷ்யாவில் நடந்து வருகின்றன. முன்னாள் சாம்பியனான இத்தாலி தகுதியே பெறாத நிலையில், நடப்பு சாம்பியன் ஜெர்மனி, முதல் சுற்றுடன் வெளியேறியது. நாக் அவுட் சுற்றில் நடந்த ஆட்டங்களில் தோல்வியடைந்து மெஸ்ஸியின் அர்ஜென்டினா, ரொனால்டோவின் போர்ச்சுகல் ஆகியவை வெளியேறின.

இந்த நிலையில் முன்னாள் சாம்பியனான ஸ்பெயின், போட்டியை நடத்தும் ரஷ்யாவுடன் விளையாடியது. இந்த ஆட்டத்தின் 12வது நிமிடத்தில் செர்ஜியோ இக்னாஷ்விச் சேம் சைடு கோல் அடிக்க, 1-0 என ஸ்பெயின் முன்னிலை பெற்றது. ஆட்டத்தின் 41வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி ரஷ்யாவின் டிஜூபா கோலாக்கினார். அதையடுத்து 1-1 என சமநிலை உருவானது. ஆட்ட நேர முடிவில் 1-1 என இரு அணிகளும் சம நிலையில் இருந்தன.

அதையடுத்து, 30 நிமிடங்கள் கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் இரு அணிகளும் கோலடிக்கவில்லை. உண்மையில் இந்த ஆட்டத்தில் ஸ்பெயின் கோல் ஏதும் அடிக்கவில்லை. ஓசியில் சேம் சைடு கோல் மட்டுமே அதற்கு கிடைத்தது.

வாய்ப்பை தவறவிட்டது

வாய்ப்பை தவறவிட்டது

இறுதியில் பெனால்டி ஷூட்அவுட் கொடுக்கப்பட்டது. அதில் ஸ்பெயினின் ஆன்ட்ரே இனியஸ்டா, ஜெரார்ட் பிக், செர்ஜியோ ராமோஸ் ஆகியோர் கோலடித்தனர். கோகோ, ஆஸ்பாஸ் ஆகியோர் கோலடிக்கும் வாய்ப்பை தவறவிட்டனர்.

ரஷ்யாவுக்கு வெற்றி

ரஷ்யாவுக்கு வெற்றி

ரஷ்யாவின் பெடார் ஸ்மோலோவ், செர்ஜி இக்னஷேவிச், அலெக்சாண்டர் கோலோவின், டெனிஸ் செரிஷெவ் ஆகியோர் ஷூட்அவுட்டில் கோலடித்தனர். அதையடுத்து 4-3 என பெனால்டி ஷூட்அவுட்டில் வென்று, ரஷ்யா முதல் முறையாக காலிறுதிக்கு முன்னேறியது. ரஷ்யா முதல் முறையாக ஷூட்அவுட்டை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

கலக்கினார் கோல்கீப்பர்

கலக்கினார் கோல்கீப்பர்

ரஷ்ய கேப்டன் இகோர் அகின்பீப் சரியாக கணித்து, ஸ்பெயினின் இரண்டு பெனால்டி ஷூட்அவுட் வாய்ப்புகள் கோலாவதை தடுத்து நிறுத்தினார். இதுவே ரஷ்யாவின் வெற்றிக்கு முக்கிய காரணமாகும். மேலும் ஆட்டத்தின்போதும், ஸ்பெயின் கோல் வாய்ப்புகளை அவர் தடுத்து நிறுத்தினார். தற்போது ரஷ்யாவின் ஹீரோவாகியுள்ளார் அகின்பீப்.

ஸ்பெயின் மோசம்

ஸ்பெயின் மோசம்

ஆட்டம் நடந்த 120 நிமிடங்களில் பந்து பெரும்பாலும் ஸ்பெயினிடம் இருந்தபோதும், அந்த அணி ஏதோ ஒரு காட்சிப் போட்டியில் விளையாடுவதுபோல் விளையாடியது. கோலடிக்கும் அதன் ஒவ்வொரு முயற்சியையும் ரஷ்யா தனது தடுப்பாட்டத்தால் தடுத்து நிறுத்தியது. மிகப் பெரிய அணிகள் ஏற்கனவே வெளியேறியுள்ள நிலையில், கோப்பையை வெல்வதற்கான முயற்சியில் ஈடுபட்டிருக்க வேண்டிய ஸ்பெயின், மிகவும் சாதாரணமாக விளையாடியது. 120 நிமிட நேர ஆட்டத்தில் ரஷ்யாவை தவிர்த்து பார்த்தால், மிகவும் போரடிக்கக் கூடியதாகவே இந்த ஆட்டம் அமைந்தது.

Story first published: Sunday, July 1, 2018, 23:32 [IST]
Other articles published on Jul 1, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+